மக்காச்சோளம், இந்தி மொழியில் சோளம் மற்றும் பூட்டா என்றும் அழைக்கப் படுகிறது, இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு முக்கிய உணவுப் பயிராக விளைவிக்கப் படுகிறது.
மேலும் உடலுக்கு குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஊட்டச் சத்துக்களைக் கொண்டுள்ளது.
இதில் இரத்த சோகை, புற்றுநோயைத் தடுக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கண் பார்வையை ஊக்குவிக்கும் மற்றும் எடை மேலாண்மைக்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
உலகளாவில் பிரபலமாக உள்ள மக்காச்சோளம் அனைத்து தானியங்களை விட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணப்படுகிறது.
மக்காச்சோளத்தின் தனித்துவமான சுவை மற்றும் பரவலான நுகர்வு தவிர, மக்காச்சோளம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
மக்காச்சோளத்தில் மெக்னீசியம் உள்ளது, இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை இயல்பாக பராமரிக்க உதவுகிறது.
இது இதய நோய்கள் மற்றும் பல்வேறு நாட்பட்ட சுகாதார பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது.பல்வலியை போக்க சோளம் உதவுகிறது.
ஏனெனில், இதில் பற்களை வலுப்படுத்தும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ளன. சோளத்தில் அதிக அளவில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.
இது உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்கிறது. மேலும், இரத்த சோகை அபாயத்தை குறைக்கிறது.
தேவையான பொருட்கள் :
மக்காசோளம் – கால் கப்
பாலக் கீரை – ஒரு கப் (அரைத்தது)
வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
சின்ன வெங்காயம் – நான்கு
பச்சைமிளகாய் – இரண்டு (நறுக்கியது)
பூண்டு – பத்து பல்
காய்ந்த மிளகாய் – இரண்டு
கடுகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
தனியா தூள் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
கரிவேபில்லை – சிறிதளவு
புலி கரைச்சல் – கால் கப்
நெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
நல்லெண்ணெய் – இரண்டு தேகரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பாலக் கீரை மற்றும் பச்சை மிளகாய், தண்ணீர் சிறிதளவு சேர்த்து பாதி வேகவிட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கரிவேபில்லை, பூண்டு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், மக்காசோளம், தக்காளி ஆகிய வற்றை ஒவொன்றாக சேர்த்து
நன்றாக வதக்கி பிறகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, புலி கரைச்சல் ஆகிய வற்றை சேர்த்து
இரண்டு நிமிடம் கழித்து அரைத்த கீரை விழுதை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு கொத்த மல்லி துவி ஏறகவும்.