அருமையான பால் போளி செய்வது எப்படி?





அருமையான பால் போளி செய்வது எப்படி?

0
நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதில் பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide) எனும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்க படுகிறது. இது மைதா என அழைக்கப் படுகிறது.
அருமையான பால் போளி செய்வது எப்படி?
பென்சாயில் பெராக்சைடு என்னும் இரசாயனமானது நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ளது. இந்த ரசாயனம் புரதத்துடன் (protein) இணைந்து நீரிழிவு நோய்க்கு( diabetes ) மிக முக்கிய காரணியாய் அமைகிறது.
மேலும் மாவை மிருதுவாக மாற்றுவதற்காக அலாக்சான் (alloxan) என்னும் ரசாயனம் பயன்படுத்தப் படுகிறது. இந்த அலாக்சான் என்பது ஆராய்ச்சிக் கூடத்தில் எலிகளில் நீரிழிவு நோயை உண்டாக்க பயன்படுத்தப் படுகிறது.

மேலும் மைதாவில் நார்ச்சத்து கிடையாது. நார்ச்சத்து இல்லாத உணவு நமது ஜீரண சக்தியை குறைத்து விடும். 

எனவே மைதாவில் செய்யப்படும் பொருட்கள் நமது உடலுக்கு ஏற்றவை அல்ல. அவை செரிமான பிரச்சனைக்கும் வழிவகுக்கும். இதில் குறிப்பிடும்படியான ஆரோக்கியத்திற்கு உகந்த சத்துக்கள் எதுவும் இல்லை. 

எனவே இதனால் குழந்தைகளுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஆகவே முடிந்த அளவு குழந்தைகளுக்கு மைதாவினால் ஆன பொருட்களை தவிர்ப்பது நல்லது.

வீட்டில் பிரசவம் பார்ப்பது ஆபத்து என்று எச்சரிக்கும் மருத்துவர் !

தேவையான பொருட்கள் . :

மைதா - 1/2 கப்

ரவை - 1/2 டீஸ்பூன்

நெய் - 1/2 டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

தண்ணீர் - தேவைக்கு ஏற்ப

எண்ணெய் - பொறிப்பதற்கு ஏற்ப

பால் செய்வதற்கு

பால் - 1/2 லிட்டர்

சர்க்கரை - 1/4 கப்

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

கற்பூரம் - ஒரு சிட்டிகை

பாதாம், முந்திரி - கை அளவு

குங்குமப் பூ - கொஞ்சம் (இருந்தால்)
செய்முறை :

ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, நெய், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின் அதை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். 
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். பின் ஏலக்காய் பொடி, கற்பூரம் சேர்த்துக் கொள்ளவும்.

அந்த பால் நன்கு கெட்டிப் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ஊற வைத்த மாவை குறைந்த மாவு எடுத்து சிறிது சிறிதாக திரட்டி கொள்ளவும். பூரி செய்ய திரட்டுவது போல் திரட்டுங்கள்.

அதை எண்ணெயில் போட்டு பூரி போல் சூட்டு கொள்ளவும். இந்த பூரியை காய்ச்சி வைத்திருக்கும் பாலில் போட்டு விடவும். 

இறுதியாக பாதாம், முந்திரிகளை நெய்யில் வறுத்தி அதில் போடவும். பிறகு குங்குமப்பூவும் சேர்த்துக் கொள்ளவும். சுவையான பால் போளி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)