பச்ச முந்திரி குருமா செய்வது எப்படி? #Kuruma





பச்ச முந்திரி குருமா செய்வது எப்படி? #Kuruma

0
முந்திரியை அதிகமாக உண்ணும் போது அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம் என கூறப்படுகிறது. முந்திரியானது முந்திரி பழத்திலிருந்து பெறப்படுகிறது. முந்திரி மரமானது பிரேசில் நாட்டை பூர்வீகமாகக் கொண்டது. 
பச்ச முந்திரி குருமா செய்வது எப்படி?
ஆனால் மக்கள் அதிகமாகப் பயன்படுத்துவதால் தற்சமயம் பல நாடுகளில் முந்திரி பயிரிடப்படுகிறது. முந்திரியில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் உள்ளன. 
இவ்வளவு சத்துக்கள் உள்ள போதும் முந்திரி சில சமயங்களில் ஆபத்தை விளைவிக்கலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன. அதிகமாக முந்திரியை சாப்பிடும் போது அது உங்களுக்கு ஒவ்வாமை அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். 

அதிக அளவு முந்திரியை சாப்பிடும் போது அது சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மேலும் நாள்பட்ட உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஏனெனில் இவை அதிக அளவில் ஆக்சலேட்டை கொண்டுள்ளன. 

முந்திரியானது டைரமைன் மற்றும் ஃபைனிலெதிலமைன் என்கிற அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலங்கள் நமது உடல்களுக்கு சில நன்மைகளை செய்கிறது என்றாலும் சிலருக்கு இதனால் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
தேவையான பொருட்கள் :

எண்ணெய் – இரண்டு தேகரண்டி

பட்டை – ஒன்று

லவங்கம் – ஒன்று

ஏலக்காய் – ஒன்று

பிரிஞ்சி இலை – ஒன்று

வெங்காயம் – மூன்று (நறுக்கியது)

பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)

தக்காளி – இரண்டு (நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்’

காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு – ஒரு கப் (நறுக்கியது)

மஞ்சள் தூள் – சிறிதளவு

மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்

தனியா தூள் – ஒரு டீஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவைகேற்ப

தேங்காய் அரைத்த விழுது – அரை கப்

வேக வைத்து அரைத்த முந்திரி பருப்பு – கால் கப்

கொத்த மல்லி – சிறிதளவு
நோய்களை மாயமாக்கும் தேங்காய் மாயா ஜாலம் !
செய்முறை
பச்ச முந்திரி குருமா செய்வது எப்படி?
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி,

ஆகிய வற்றை ஒவொன்றாக சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

பிறகு, காரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும், 
பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

பின், தேங்காய் விழுது சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து முந்திரி விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு கொத்த மல்லி துவி ஏறகவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)