மாம்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு எத்தனையோ நன்மைகள் இருந்தாலும்.. அளவுக்கதிமகாக சாப்பிட்டால் சில விளைவுகளும் ஏற்படுமாம்.
நாவில் எச்ச்சில் ஊற வைக்கும் இனிப்புச்சுவை கொண்ட மாம்பழத்தை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்திற்கான சீசன் கோடைக்காலம் தான்.
கோடைக்காலம் வந்து விட்டால் போதும் பழக்கடைகளுக்குள் என்ட்ரி கொடுத்ததும் முதலில் நம்மை வரவேற்பது மாம்பழம் ஆகத்தான் இருக்கும். பழக்கடையை கடந்து போனாலே வாசனையை சுண்டி இழுக்கும் மாம்பழங்கள்.
கடைகளில் மலைப்போல் அடுக்கி வைத்திருப்பார்கள். கோடை காலத்தில் மாம்பழத்தை ருசிக்காதவர்களே இல்லை என்று சொல்லிவிட முடியும்.
விலை மலிவாக இருக்கும் என்பதோடு அதிக சத்து நிறைந்த பழங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவார்கள்.
மாம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு எத்தனையோ நன்மைகள் இருந்தாலும். அளவுக்கதிமகாக சாப்பிட்டால் சில விளைவுகளும் ஏற்படும்.
மாம்பழத்தில் வைட்டமின் ஏ, நார்சத்து, கார்போ ஹைட்ரேட், சர்க்கரை சத்து உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது. குறிப்பாக பழத்தின் தோல் பகுதியில் வைட்டமின் சி சத்து உள்ளது.
நம் உடலுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவையும் கிடைக்கிறது. மாம்பழங்களை அதிகம் சாப்பிடுவதால் முகப்பரு ஏற்படலாம்.
ஏனெனில் மாம்பழங்களில் உள்ள அளவுக்கதிமான இனிப்புச் சுவையே அதற்கு காரணம். தோல் எரிச்சலை அதிகப்படுத்தும்.
தேவையானவை:
புளிக்காத புது தயிர் – 1 கப்,
நன்கு பழுத்த மாம்பழம் – 1,
பச்சை மிளகாய் – 1,
மல்லித்தழை (விருப்பப் பட்டால்) – சிறிது,
தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.
செய்முறை:
மாம்பழத்தை கழுவி, தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாய், தேங்காயை கரகரப்பாக அரையுங்கள்.
இதனுடன் மாம்பழத் துண்டுகளை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
அத்துடன் தயிர் சேர்த்து நன்கு கலந்து, எண்ணெயைக் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேருங்கள். இனிப்பும் புளிப்பும் கலந்த இதமான தயிர் பச்சடி இது.