சத்தான கோதுமை ரவை புட்டு செய்வது எப்படி?





சத்தான கோதுமை ரவை புட்டு செய்வது எப்படி?

0
அதிகளவிலான நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி அடங்கியுள்ள கோதுமை ரவை உடல் எடை குறைப்பிற்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல தேர்வாக விளங்குகிறது. 
சத்தான கோதுமை ரவை புட்டு செய்வது எப்படி?
ஓட்ஸ் போன்ற பல விதமான தானியங்களை விட இதில் பன்மடங்கு பயன்கள் உள்ளது என நம்பப்படுகிறது. 

கோதுமை ரவையை லேசாக கொதிக்க வைத்து, லேசாக எண்ணெய் மற்றும் காய்கறிகள் சேர்த்து, சாலாட்டில் பயன்படுத்தலாம் அல்லது அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தலாம். 
அரபு நாட்டு சாலட்டான டபௌலேவில் இதை தான் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துகின்றனர். உடல் எடை குறைப்பிற்கு அதிகமான நார்ச்சத்து அடங்கிய உணவின் பயன்களை பற்றி தனியாக சொல்ல தேவையில்லை. 

நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவி, உடலை சிறப்பாக செயல்பட மேம்படுத்தி, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வைக்கும். இது போக, உங்கள் உணவில் உள்ள நார்ச்சத்தை சர்க்கரையாக மாற்ற முடியாது. 

அதனால் தான் உடல் எடை குறைப்பிற்கு கோதுமை ரவை உண்ணுவது சரியானதாக உள்ளது. உங்கள் உடலில் வேகமாக செயல்பட்டு எரிந்து போகும் உணவு தான் உடல எடை குறைப்பிற்கு பயனாக அமையும் என நீங்கள் நினைக்கலாம். 

ஆனால் அதில் உண்மை இல்லை. வேகமாக செயல்படும் உணவினால் உங்களுக்கு வேகமாக பசி எடுக்கும். மேலும் உங்கள் உடலில் அதிகமான சர்க்கரையும் தேங்கி விடும். 

கோதுமை ரவையோ உங்கள் உடலில் மெதுவாக உடைக்கப்பட்டு மெல்ல கரையும். சரி இனி கோதுமை ரவை பயன்படுத்தி சத்தான கோதுமை ரவை புட்டு செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

ஏலத்திற்கு வரும் வீட்டை வாங்கலாமா?

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - 3 கப்

தேங்காய்த் துருவல் - 2 கப்

வாழைப்பழம் - 2

நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

உப்பு - சிறிதளவு

செய்முறை :
கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் போடவும். இதில் கொஞ்சம் சூடான நீர் தெளித்து ஈரப்பதத் துடன் பிசைந்து கொள்ளவும்.

புட்டுக் குழலில் தேங்காய் துருவல் கொஞ்சம் போட்டு அடுத்து பிசைந்த ரவை போட்டு மீண்டும் தேங்காய் துருவல் என நிரப்பி 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைக்கவும்.

எலும்பு வலுவிழப்பு நோய் என்றால் என்ன?

வெந்ததும் வாழைப்பழம், நாட்டு சர்க்கரை போட்டு பிசைந்து குழந்தை களுக்கு கொடுக்கலாம். சூப்பரான கோதுமை ரவை புட்டு ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)