டேஸ்டியான ராஜ்மா மசாலா செய்வது எப்படி?





டேஸ்டியான ராஜ்மா மசாலா செய்வது எப்படி?

0
ராஜ்மாவுக்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. வயது முதிர்ந்த காலங்களிலும், நம் உடலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டுமென்றால் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். 
ராஜ்மா மசாலா செய்வது
ராஜ்மாவில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் அடங்கியுள்ளது. 

உடலின் எடையை குறைக்க ராஜ்மாவில் அடங்கி யிருக்கும் அதிக அளவு நார்ச்சத்தானது உடல் எடையை சீராக வைக்கிறது. நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்தும். இதன் மூலம் நாம் உண்ணும் உணவின் அளவானது குறையும். 

இதில் அதிகப்படியான புரதச் சத்து நிறைந்துள்ளதால் நம் உடலில் உள்ள கார்போ ஹைட்ரேட் அளவினை அதிகமாக சேர்க்க விடாமல் தவிர்க்கின்றது. உடல் எடையை குறைக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். 
புற்றுநோய் தாக்கத்தை குறைக்க புற்று நோய் உள்ளவர்கள் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் புற்றுநோய் செல்கள் நம் உடம்பில் அதிகமாகாமல் தடுத்துக் கொள்ளலாம். 

இதில் அதிகப் படியான மக்னீசியம் இருக்கிறது. இந்த மக்னீசியம் சத்தானது ஆன்டி- ஆக்ஸிடண்டாக செயல்பட்டு நம் உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது. 
இதில் வைட்டமின் k அதிகமாக இருப்பதால் நம் உடம்பில் புதியதாக செல்கள் உருவாக்குவதில் இருக்கின்ற சிக்கல்களை தடுத்து விடும்.

தேவையான பொருட்கள் :

ராஜ்மா - 1 கப்

நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்

நறுக்கிய தக்காளி - அரை கப்

இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்

தனியா தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

கல் உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - தேவைக்கு

சீரகம் - அரை டீஸ்பூன்
இதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள் !
செய்முறை:
ராஜ்மா என்பது ‘ரெட் கிட்னி பீன்ஸ்’ என்று அழைக்கப்படும் பெரிய வகை பயறு. இதனை 12 மணி மணி நேரம் நீரில் ஊற வைத்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிற மாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ப.மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் கரம் மசாலா, தனியா தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை கொட்டி லேசாக வதக்கவும். பின்னர் தக்காளியை கொட்டி கிளறவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் வேக வைத்த ராஜ்மாவை கொட்டி 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும். சூப்பரான ராஜ்மா மசாலா ரெடி. 
உடல் எடையை குறைக்கும் போது செய்யக்கூடாத 7 செயல்கள்!
ஆரோக்கிய பலன் : 

இதில் துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. இது சிறு நீரகத்திற்கும் மிக நல்லது. இதய படபடப்பை சீராக்கும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். சர்க்கரையை கட்டுப் படுத்தும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)