அருமையான இறால் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி?





அருமையான இறால் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி?

பழங்காலம் தொட்டு இன்று வரை இந்திய உணவுகளின் முக்கியமானதாக உள்ளது நெய். நீங்கள் சாப்பிடக்கூடிய எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு கூடுதல் சுவை அளிக்கும். 
அருமையான இறால் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி?
இதோடு உங்களது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இது குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், 

வெண்ணெய்யை விட உருக்கிய சுத்தமான பசு நெய் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிமானிக்கும் திறன் உள்ளதாக நிரூபிக்கப் பட்டுள்ளது. 
உங்களது உணவில் நீங்கள் நெய் சேர்த்துக் கொள்ளும் போது ஏராளமான நன்மைகளை நீங்கள் அடைவீர்கள். 

குறிப்பாக காலையில் சாப்பிடும் உணவில் சிறிதளவு நெய் ஊற்றி சாப்பிடும் போது உடலுக்கு குளிர்ச்சியை அளித்து உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் நினைவுத்திறன் அதிகரிக்கிறது.

நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதம் நிறைந்திருப்பதால் உடலுக்கு நன்மை அளிக்கிறது. உடலில் உள்ள தேவையற்ற சத்துக்களை வெளியேற்றவும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவியாக உள்ளது.
தேவையான பொருட்கள்:

1. இறால் – 1/2 கிலோ

2. நெய் – 1/4 கப்

3 .பெரிய வெங்காயம் – 1 (சிறிதாக வெட்டி வைக்கவும்)

4. காஷ்மீரி மிளகாய் – 5 (நல்ல மணம் & நிறம் கொடுக்கும், காரம் அதிகம் இருக்காது )

5. வரமிளகாய் – 4 அ 5

6. வரமல்லி – 1 தேக்கரண்டி

7. மிளகு – 1 தேக்கரண்டி

8. சீரகம் – 1 தேக்கரண்டி

9. சோம்பு – 1 தேக்கரண்டி

10. இஞ்சி – 1 இன்ச்

11. பூண்டு – 5 பெரிய பல்

12. எலுமிச்சைச்சாறு – 1 மேசைக் கரண்டி

13. தயிர் – 1/4 கப்

14. கறிவேப்பிலை – 2 கொத்து

15. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்

16. இந்துப்பு – தேவையான அளவு
செய்முறை:
இறால் நெய் ரோஸ்ட் செய்முறை
4 முதல் 9 வரை உள்ள பொருட்களை கடாயில் மிதமான அடுப்பில் தனித்தனி யாக வறுத்து மிக்சி ஜாரில் போட்டு 10, 11 மற்றும் 12 ஐ சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

முதலில் ஒரு கடாயில் இறால், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து, இறாலில் உள்ள தண்ணீர் வற்றும் வரை ஓட்டி விட்டு (5 to 8 நிமிடம்) தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு கடாயில் நெய் 1/4 கப் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதங்கிய பின் அரைத்து வைத்த மசாலா மற்றும் 
தயிர் சேர்த்து கலக்கி விட்டு மசாலா கலர் நிறம் டார்க் ஆக மாறும் வரையும் தண்ணீர் சுண்டும் வரையும் ஓட்டி விடவும் (8 to 10 நிமிடம் ஆகும்). 
அதன் பின் கறிவேப்பிலை போட்டு 2 நிமிடம் ஓட்டி விட்டு வேக வைத்த இறாலை சேர்த்து கலக்கி விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து 5 to 8 நிமிடம் நல்லா பிரட்டி விட்டு ட்ரை ஆக வந்த பின் இறக்கி வைக்கவும்.

ஷ்ஷ்ஷ் அப்பா! அப்படியே மசாலா மணக்க அலாதி சுவையான “இறால் நெய் ரோஸ்ட்” கொழுப்பில் மிதக்க உள்ளே அள்ளிப் போட தயார்!
Tags: