தக்காளி – தேங்காய் பச்சடி செய்வது எப்படி?





தக்காளி – தேங்காய் பச்சடி செய்வது எப்படி?

0
தேங்காய் பாலில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன, அவை எல்டிஎல் (கெட்ட) கொழுப்பின் அளவைக் குறைக்கவும், எச்டிஎல் (நல்ல) கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவும். 
தக்காளி – தேங்காய் பச்சடி செய்வது எப்படி?
இதனால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. 

தேங்காய்ப்பூ சாப்பிடுவதால் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைக்கலாம். இதில் குறைந்த அளவு கலோரியே உள்ளது. வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதால் உடல் எடையை வேகமாகக் குறைக்க முடியும். 

புற்றுநோய் செல்களைத் தூண்டுகிற ஃப்ரீ ரேடிக்கல்லை நம்முடைய உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றல் தேங்காய்ப் பூவுக்கு உள்ளது. 
மேலும், காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேங்காய் எண்ணெயையே சாப்பிடலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடித்தால், உடல் எடை குறையும் என்பார்கள்.

தக்காளியில் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. அதேபோல பொட்டாசியம் சத்தும் உள்ளது. விட்டமின் சி சத்தானது சரும ஆரோக்கியத்திற்கு உதவியாக அமைகிறது. 

விட்டமின் கே சத்தானது ரத்தத்தை உறைய வைப்பதற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாகும். பொட்டாசியம் சத்தானது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

தக்காளியில் நிறைவான நீர்ச்சத்தும், குறைவான கலோரியும் இருப்பதால் உடல் எடையை குறைக்க இது உதவியாக அமையும். அது மட்டுமல்லாமல், தக்காளியில் உள்ள நார்ச்சத்து, வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் பசி கட்டுப்படுத்தப் படுகிறது.

தேவையானவை:

புளிக்காத தயிர் – 1 கப்,

தேங்காய் துருவல் – அரை கப்,

தக்காளி (நல்ல சிகப்பு நிறம்) – 2,

பச்சை மிளகாய் – 2,

இஞ்சி – ஒரு சிறு துண்டு,

உப்பு – தேவைக்கு.

தாளிக்க:

கடுகு – கால் டீஸ்பூன்,

எண்ணெய் – ஒன்றரை டீஸ்பூன்.
அரசியல் தலைவர்களுக்கு மாணவிகளை விருந்தாக்கிய பெண்கள் !
செய்முறை:
தக்காளி – தேங்காய் பச்சடி செய்வது
இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இவற்றுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து தயிருடன் ஒன்றாகக் கலந்து, எண்ணெயைக் காய வைத்து கடுகு தாளித்து சேருங்கள்.
விருப்ப முள்ளவர்கள், மல்லித் தழையை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். கோடைக்கு ஏற்ற குளுகுளு தயிர் பச்சடி இது. (தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தும் சேர்க்கலாம்).

தேங்காய்ப்பால் பானம் செய்வது எப்படி? 

தேங்காயை நன்கு துருவி, சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்த்து கெட்டியாக தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ளுங்கள். 

தேங்காய்ப் பால் தவிர மற்ற எல்லா பொருள்களையும் ஒன்றாக சேர்த்து 1 ஸ்பூன் அளவு பசும்பால் சேர்த்து நன்கு கலக்குங்கள். தேங்காய் எண்ணெய் கல்லீரல் மற்றும் குடலுக்கும் நன்மை பயக்கும். 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)