ஆட்டுக்கறியை பொறுத்தவரை, நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது.. உடல் சூட்டை தணிக்கக் கூடியது. தோலுக்கு வலிமை தருவதுடன், சருமத்துக்கான பளபளப்பையும் தரக்கூடியது.
மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம்.
இதில், ஆட்டின் நுரையீரல், கொழுப்புகளை நாம் சமைத்து சாப்பிடும் போது, உடலுக்கு வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை தருகிறது. நம்முடைய நுரையீரல் மற்றும் இடுப்பு பகுதிக்கு நல்ல வலிமையை கூட்டுகிறது.
ஆட்டின் கண்களை எடுத்து கொண்டால், நம்முடைய கண்களுக்கு மிகுந்த பலத்தை தந்து பார்வையை கூர்மைப்படுத்தும். ஆட்டின் நெஞ்சு பகுதியை சமைத்து சாப்பிடும் போது, நம்முடைய கபம் நீங்கும்.
மார்புக்கு பலத்தை தரக்கூடியது. அதனால் தான், பலவீனமானமாவர்கள் ஆட்டின் மார்பை, நெஞ்செலும்பாக வாங்கி சூப் வைத்து சாப்பிடுவார்கள்.
வைட்டமின் A, B, C உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஆட்டின் இதயம், மன ஆற்றலை பெருக்கக் கூடியது. ஆட்டு கால்களை சூப் வைத்து சாப்பிடும் போது, நம்முடைய கால்களுக்கு பலத்தை தருகிறது.
ஆட்டு மூளையில், கெட்ட கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு.. இதிலுள்ள பாஸ்பரஸ், நம்முடைய கிட்னியில் உள்ள கசடுகளை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஆடு இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சி வழங்கும் உணவை சேர்ந்தது.
தேவையான பொருட்கள் :
மட்டன் - முக்கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது - ஒன்னரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்
தயிர் -1 டேபிள் ஸ்பூன்
சோம்புத்தூள் - கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிள்குத் தூள் - முக்கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - முக்கால் ஸ்பூன்
சீரகத்த் தூள் - முக்கால் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 பெரியது
மிளகாய் - 2
மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு
பன்றிக்கறி மூல நோயை குணப்படுத்தக் கூடியதா?
செய்முறை :
மட்டனை சுத்தம் செய்து கழுவி சுமார் அரைமணி நேரம் தண்ணீர் வடி கெட்டவும்.
குக்கரில் மட்டன், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, தயிர் சேர்த்து கலந்து வைத்து மூடி 5 விசில் விசில் வைத்து சிம்மில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.
குக்கரில் மட்டன், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, தயிர் சேர்த்து கலந்து வைத்து மூடி 5 விசில் விசில் வைத்து சிம்மில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.
மட்டனில் இப்படி தண்ணீர் சேர்க்கா விட்டாலும் ஊறி இருக்கும்.
ஊறிய தண்ணீரை வற்ற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மிளகாய் போட்டு வதக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மிளகாய் போட்டு வதக்கவும்.
வதக்கிய வெங்காயத் துடன் வேக வைத்த மட்டனை சேர்க்கவும்.
மட்டனுடன் அனைத்து மசாலாவும் சேர்த்து விடவும்.
மசாலாவை மட்டனுடன் சேர்த்து பிரட்டி விடவும்.
மூல நோய் என்றால் என்ன? அதற்கான காரணம் என்ன?
சிறிது தண்ணீர் தெளித்து சிம்மில் மூடி போட்டு 5 நிமிடம் வைக்கவும்.
மூடியை திறந்து கட் செய்த மல்லி இலை தூவவும்.
சுவையான ட்ரை மட்டன் சுக்கா ரெடி. இதனை ப்லைன் ரைஸ், வெரைட்டி ரைஸ், பிரியாணி, ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம்.