உருளைக்கிழங்கு & காலிஃப்ளவர் பொரியல் ரெசிபி ! #Poriyal





உருளைக்கிழங்கு & காலிஃப்ளவர் பொரியல் ரெசிபி ! #Poriyal

நீங்கள் உருளைக்கிழங்கை அதிக அளவில் உட்கொண்டால், கவனமாக இருங்கள், ஏனென்றால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.
உருளைக் கிழங்கு & காலிஃப்ளவர் பொரியல் ரெசிபி !
உருளைக்கிழங்கில் உள்ள கார்போ ஹைட்ரேட்டுகள் கீல்வாதத்தின் வலியை அதிகரிக்கச் செய்யும், எனவே கீல்வாத நோயாளிகள் உருளைக்கிழங்கை அதிகம் உட்கொள்ளக் கூடாது.

நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். அதாவது, இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க, நீங்கள் உருளைக் கிழங்கிலிருந்து விலகி இருந்தால் நல்லது.
உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும் என்பதை மிகச் சிலரே அறிவார்கள். அதாவது, பிபி நோயாளிகள் உருளைக்கிழங்கை அதிகம் உட்கொள்ளக் கூடாது.

உருளைக்கிழங்கில் கார்போ ஹைட்ரேட் அதிகமாக உள்ளது, இதன் காரணமாக அதிகப்படியான அளவு கலோரிகளை அதிகரிக்கும், இது உடல் பருமனை ஏற்படுத்தும்.

தேவையானவை:
உருளைக்கிழங்கு_1

காலிஃப்ளவர்_1(சிறியது)

பூண்டிதழ்_3

மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்

மஞ்சள்தூள்_சிறிது

கொத்துமல்லி இலை_கொஞ்சம்

உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்

கடுகு

உளுந்து

சீரகம்

பெருஞ்சீரகம்

பெருங்காயம்

கறிவேப்பிலை
செய்முறை:
உருளைக் கிழங்கு & காலிஃப்ளவர் பொரியல்
உருளைக் கிழங்கை வேகவைத்து சிறுசிறு துண்டு களாக்கிக் கொள்ளவும். காலி ஃப்ளவரை சிறுசிறு பூக்களாகப் பிரித்து ஒரு 2 நிமிடங்களுக்கு உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும்.

பூண்டிதழ்களை நறுக்கிக் கொள்ளவும். அல்லது ஒரு தட்டுதட்டி சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு கடாயை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுச் சூடானதும் தாளிக்க வேண்டிய வற்றைத் தாளித்து விட்டு, முதலில் பூண்டு சேர்த்து வதக்கி, அடுத்து உருளைத் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

வதங்கும் போதே மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து பிரட்டி விட்டு ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து (அ) சிறிது தண்ணீர் தெளித்து விட்டு (அ) சிறிது கூடுதலாக எண்ணெய் சேர்த்துக் கிளறி மிதமானத் தீயில் மூடி வேக விடவும்.
உருளை வெந்ததும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். அடுத்து அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காலி ஃப்ளவரைப் போட்டு வதக்கி சிறிது மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு இவற்றைத் தூவினாற் போல் போட்டு மூடி வேக விடவும்.
இது சீக்கிரமே வெந்து விடும். வெந்ததும் இதனுடன் உருளைக் கிழங்கை சேர்த்துக் கிளறி விட்டு ஒரு 5 நிமி மிதமானத் தீயில் மூடி வைக்கவும்.

இரண்டும் ஒன்றாக கலந்து வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும். இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.