வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும்.
வேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம் பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. வேப்பம் பூவை கொண்டு குல்கந்து தயாரிக்கலாம்.
இது ஆண்மையை அதிகரிக்கும் சக்தி கொண்டது. கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். குழந்தைகளுக்கு வயிற்றில் உருவாகும் பூச்சியை அழிக்கும் மருந்து.
பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் பானம். இந்த கொரோனா காலத்தில் கொரோனாவுடன் சண்டை யிடுவதற்கு உடலை தயார்ப்படுத்த, மக்கள் பல தீவிரமான முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்கள்.
அதில் ஒன்று, நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது. எனவே, வேப்பம்பூ ரசம் செய்து அனைவரும் சாப்பிடலாம். செய்முறை பற்றி கீழே கொடுத்துள்ளோம்.
தேவையானவை:
வேப்பம்பூ - 2 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
புளி, துவரம் பருப்பு - தலா 100 கிராம்,
கடுகு, மஞ்சள் தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்த மல்லித் தழை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
மஞ்சள் தூள் மற்றும் வேப்பம் பூவைச் சேர்த்து வறுக்கவும். இதில், புளியைக் கரைத்து ஊற்றி, கொதிக்க விடவும். வேக வைத்த துவரம் பருப்பில், தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும்.
பொங்கி வரும் போது, பெருங்காயத் தூளைச் சேர்த்து இறக்கவும். கடைசியில், பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழையைத் தூவவும்.
பலன்கள்:
குமட்டல், வாந்தி, சோர்வு, மயக்கத்தைப் போக்கும். பசியைத் தூண்டும். சருமத்தைப் பொலிவாக்கும். உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.