சத்ராங்கி பிரியாணி ரெசிபி செய்வது எப்படி?





சத்ராங்கி பிரியாணி ரெசிபி செய்வது எப்படி?

0
ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்தானது ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது. அதாவது இது கெட்ட கொழுப்பினைக் குறைக்கச் செய்து உடல் எடையினை நிச்சயம் குறைக்கும். 
சத்ராங்கி பிரியாணி ரெசிபி
எலும்புகள் வலிமையாக இருக்க வைட்டமின் கே சத்து அதிகம் தேவைப்படுகிறது. 

இந்த வைட்டமின் கே சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு எதிர் காலங்களில் ஆஸ்டியோ போரோசிஸ் எனப்படும் எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவு போன்ற குறைபாடுகள் ஏற்பட காரணமாகிறது.  

ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. 

இந்த சத்துக்கள் சருமத்தில் ஈரப்பதம் குறையாமல்  பாதுகாப்பதோடு. தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, தோலில் பளபளப்பு தன்மையை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது. 
பீட்ரூட், பரங்கிக்காய், கேரட், பெல் பெப்பர், ப்ரென்ச் பீன்ஸ், புதினா மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்டு செய்யப்படும் இந்த வெஜிடபிள் பிரியாணி மிகவும் ஆரோக்கிய மானது.

தேவையான பொருட்கள்

20 கிராம் கேரட்

20 கிராம் ஃப்ரென்ச் பீன்ஸ்

20 கிராம் குடைமிளகாய்

20 கிராம் ப்ரோக்கோலி

20 கிராம் பீட்ரூட்

20 கிராம் பரங்கிக்காய்

20 கிராம் மஞ்சள் பூசணிக்காய்

125 கிராம் பிரியாணி அரிசி

20 கிராம் வெங்காயம்

30 கிராம் தயிர்

சுவைக்க உப்பு

10 கிராம் புதினா

15 கிராம் நெய்

5 கிராம் முந்திரி பேஸ்ட்

1 கிராம் மஞ்சள் தூள்

1 கிராம் மிளகாய் தூள்

1 கிராம் மஞ்சள் மிளகாய் தூள்

1 கிராம் பச்சை மிளகாய் தூள்

1 கிராம் ஏலக்காய் பொடி

3 மில்லி லிட்டர் கெவ்டா வாட்டர்

3 மில்லி லிட்டர் குங்குமப்பூ தண்ணீர்

2 எண்ணிக்கை பச்சை மிளகாய்

1 கிராம் கரம் மசாலா

10 மில்லி லிட்டர் எண்ணெய்

எப்படி செய்வது 
எல்லா காய்கறிகளையும் சிறு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும். அரிசியை கழுவி 80 சதவிகிதம் வேக வைத்து கொள்ளவும்.

ஒரு பானையில் வெட்டி வைத்த காய்கறிகள், மஞ்சள் தூள், தயிர், முந்திரி பேஸ்ட், மிளகாய் பொடி, கெவ்டா தண்ணீர், குங்குமப்பூ தண்ணீர், புதினா, வெங்காயம் ஆகிய வற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.
இறால் வறுவல் செய்முறை !
முக்கால் பதத்திற்கு வேக வைத்த அரிசியில் நெய் ஊற்றி கரம் மசாலா மற்றும் வெங்காயம் சேர்த்து கிளறி கொள்ளவும்.

மண் பானையை ரொட்டி வைத்து மூடி மைக்ரோவேவ் அவனில் 15 நிமிடங்கள் வைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)