முருங்கைக்கீரை, சர்க்கரையை குறைக்கிறது. இதற்குள் ஆண்டி - ஆக்சிடன்ட், நோய் எதிர்ப்பு சக்திகள் அனைத்துமே நிரம்பி கிடக்கின்றன.
ஒரு கைப்பிடி கீரையை, 1 டீஸ்பூன் நெய் விட்டு, வதக்கி, 5 பல் பூண்டு, 5 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் போன்றவற்றை பொடித்து, தினமும் மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டால், ஏகப்பட்ட உடல்பிரச்சனைகள் தீரும் என்கிறார்கள்.
முருங்கைப்பூவை, ஒரு கைப்பிடியளவு எடுத்துக் கொண்டு 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி காலையில் உணவிற்கு முன்பு சாப்பிட்டு வந்தால், ஆண் மலடு நீங்கும். முருங்கைப்பூவை உட்கொள்ளும் போது, கண்பார்வை திறன் பெருகுகிறது.
முருங்கைப் பட்டையை தூளாக்கி, சிறிது கல் உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால், வீக்கங்கள் குறையும்.
இப்படி முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் நமக்கு பயன் தருகிறது என்றாலும், இந்த கீரையை மட்டும் வாரம் 3 முறையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
காரணம், முருங்கைக்கீரையில், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி,
வைட்டமின் B காம்பளக்ஸ், டைட்டாஜீ பைபர், கார்போ ஹைட்ரேட்ஸ், புரோட்டீன், இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் ஒளிந்து கொண்டுள்ளன.
முருங்கைக் கீரையை கொண்டு தயாரிக்கப்படும் இந்த குழிப்பணியாரம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப் படுத்தும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பொலிவான சருமம் பெற ஊட்டச்சத்து மிக்க மைசூர் பருப்பு !
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி – ஒரு கப்
வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
முருங்கைக்கீரை – ஒரு கப்
வெங்காயம் – 1
இஞ்சி – சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசி, உளுந்து, வெந்தயத்தை 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி ப.மிளகாய், இஞ்சி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் முருங்கைக் கீரை, உப்பு போட்டு போட்டு வதக்கவும்.
கீரை 5 நிமிடங்கள் வதங்கினால் போதுமானது.
வதக்கிய கீரையை மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பணியாரக் குழியில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். சூப்பரான முருங்கைக் கீரை குழிப்பணியாரம் ரெடி.
இந்தப் பணியாரத்துக்கு சாம்பார் தொட்டுச் சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும்.