கருப்பு கடலை சூப் செய்வது எப்படி?





கருப்பு கடலை சூப் செய்வது எப்படி?

0
கருப்பு கொண்டைக்கடலை இந்திய உணவுகளில் பிரதான உணவுகளில் ஒன்றாகப் பார்க்கப் படுகிறது. கருப்பு கொண்டைக் கடலையை ஊற வைத்து பல்வேறு விதங்களில் நம்மால் சமைத்து சாப்பிட முடியும். 
கருப்பு கடலை சூப்
கருப்பு கொண்டைக்கடலை புரதத்தின் நல்ல ஆதாரமாக பிரபலமாக அறியப்படுகிறது. நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரை அளவை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த இதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

பெரும்பாலான மக்கள் தினமும் காலையில் வேகவைத்த கொண்டைக் கடலையை உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. கருப்பு கொண்டைக் கடலையில் நிறைய அளவு புரோட்டீன் காணப்படுகிறது. 

இது உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. கொண்டைக் கடலையை வைத்து உங்க உடல் எடையை குறைக்க முடியும். கூந்தல் ஆரோக்கியத்திற்கும், அடர்த்தியான கூந்தலுக்கும் உதவுகிறது. 
கொண்டைக்கடலை நாள்பட்ட நோய்களை விரட்டவும் உதவுகிறது. இரத்தத்தில் உள்ள ஹூமோ குளோபின் அளவை உயர்த்த முடியும். 

கருப்பு கொண்டைக் கடலையில் உள்ள நார்ச்சத்துக்கள் சீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது. உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது உங்க செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. 

கருப்பு கொண்டைக் கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மற்றும் சீரணமின்மையை நம்மால் போக்க முடியும்.
என்னென்ன தேவை?

கருப்பு கொண்டைக் கடலை - 1 கப்,

வெண்ணெய் - 1 டீஸ்பூன்,

சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு,

மிளகுத் தூள் - தேவைக்கு,

கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?
கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் வேக வைத்து, சிறிது கொண்டைக் கடலையை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள கடலையை வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். 
அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு உருக்கி சீரகம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த கடலை விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். 

மேலே மிளகுத் தூள், தனியாக எடுத்து வைத்த கொண்டைக் கடலை சேர்த்து கலந்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)