சுவையான காளான் கோப்தா செய்வது எப்படி?





சுவையான காளான் கோப்தா செய்வது எப்படி?

0
காளான் நிறைய பேர் விரும்பி சாப்பிடுவார்கள். சிலருக்குப் பெரிதான அதன் சுவை பிடிக்காது. காரணம் அதிலிருந்து வரும் வாசனை மற்றும் குறிப்பிட்ட சுவை எதுவும் இல்லாமல் இருப்பது. 
சுவையான காளான் கோப்தா செய்வது எப்படி?
மஞ்சூரியன், சூப் போன்றவற்றைத் தவிர பெரிதாக நாம் வீடுகளில் அதை நாம் அடிக்கடி சமைத்து சாப்பிடுவதில்லை. மிக அரிதாகவே வீட்டில் சமைத்து சாப்பிடுவதுண்டு. 

ஆனால் அடிக்கடி சாப்பிட வேண்டிய காய்கறிகளில் ஒன்று இந்த காளான். காளான்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு நன்மைகளையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 
குறிப்பாக அவை பீட்டா- குளுக்கன்களை கொண்டிருப்பதால் பல நன்மைகளை அளிக்கிறது. எனவே, பெரும்பாலான உணவுகளைப் போலவே ஊட்டச்சத்து அடர்த்தியான, காளான்களும் ஆரோக்கியத்தை அளிக்கின்றன. 

காளான் மிக உயர் அடர்த்தி கொண்ட இரண்டு ஆன்டிஆக்சிடென்ட்களைக் கொண்டுள்ளது. அவை எர்கோத்தியோனின் மற்றும் க்ளுட்டத்தின் ஆகியவை. 

இந்த இரண்டு ஆன்டி ஆக்சிடென்ட்கள் ஒன்றாக இருக்கும் போது அவை கடுமையாக உழைத்து உடல் சார்ந்த அழுத்தங்களை போக்கி வயது முதிர்ச்சிக்கான அறிகுறிகளான சுருக்கம் போன்றவற்றை வர விடாமல் தடுத்து உடலை பாதுகாக்கிறது. 

உங்கள் இளமையைத் தக்க வைக்கிறது. வயது அதிகரிக்கும்போது உங்கள் மூளையைப் பாதுகாக்க காளான் உதவுகிறது. 
மேலே கூறப்பட்ட இரண்டு ஆன்டி ஆக்சிடென்ட்களான எர்கோத்தியோனின் மற்றும் க்ளுட்டத்தின் ஆகியவை பார்க்கின்சன் மற்றும் அல்சைமர் பாதிப்புகளைத் தடுக்க உதவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் . 

தேவையான பொருட்கள்:

பட்டன் காளான் - 200 கிராம்

கேரட் - 1

முட்டைகோஸ் - 1

பச்சைப் பட்டாணி - கால் கப்

மைதா - 1 டீஸ்பூன்

சோள மாவு - 3 டீஸ்பூன்

மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

கொத்த மல்லி - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவைகேற்ப
மூலநோய் வெளிக்காட்டும் அறிகுறிகள் !
செய்முறை :
காளான் கோப்தா செய்வது
கேரட்டை துருவிக் கொள்ளவும். முட்டை கோஸ், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை பட்டாணியை வேக வைத்து அரைத்து கொள்ளவும்.

காளானை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.

மற்றொரு பாத்திரத்தில், துருவிய கேரட், பொடியாக வெட்டப்பட்ட முட்டைகோஸ், அரைத்து வைத்த பச்சைப் பட்டாணி, மைதா, சோள மாவு, மிளகாய் தூள், மிளகுத் தூள்

மற்றும் தேவையான அளவு உப்பு ஆகிய வற்றை சேர்த்து நன்றாக மாவு போல் பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே வேக வைக்கப்பட்ட காளான் களை, இந்த கலவையால் முழுவதுமாக மூடும்படி நன்றாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். 
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்த காளான் உருண்டை களை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பொரித்த காளான்களை ஒரு தட்டில் வைத்து அதனை நேர்வாக்கில் இரண்டாக வெட்டி வைத்து அதன் மேல் கொத்த மல்லி தழைகளை தூவினால், சூடான, சுவையான, மொறு மொறுப்பான காளான் கோப்தா தயார். 

இதனை சாம்பார் அல்லது தயிரில் ஊற வைத்தும் சாப்பிடலாம்.

Post a Comment

0Comments

Post a Comment (0)