சுவையான அன்னாசி – தக்காளி இனிப்பு பச்சடி செய்வது எப்படி?





சுவையான அன்னாசி – தக்காளி இனிப்பு பச்சடி செய்வது எப்படி?

0
தக்காளியில் உள்ள லைகோபீன் ஆனது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. 
சுவையான அன்னாசி – தக்காளி இனிப்பு பச்சடி செய்வது எப்படி?
சமைத்த தக்காளியானது உடலில் லைக்கோபீன் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே சமைத்த தக்காளியானது பச்சை தக்காளியை விடவும் அதிக பயனளிக்கிறது.

தக்காளியானது தினமும் நமது உடலுக்கு தேவையான அளவில் வைட்டமின் சியை கொடுக்கிறது. இயற்கையாகவே இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. 
இது உடலில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல் பிரச்சனைகளிலிருந்து உடலை பாதுகாக்கிறது. மேலும் இது வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

நமது நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்த இது உதவுகிறது. 

இரத்தம் உறைதலுக்கு உதவக்கூடிய வைட்டமின் கேயானது தக்காளியில் அதிகமாக உள்ளது. எனவே தக்காளி ஒரு மல்டி வைட்டமின் உணவு என கூறலாம்.

தக்காளியை சாறாக மாற்றி நமது சருமத்தில் தடவினால் அது நமக்கு பல நன்மைகளை அளிக்கும். சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய இது உதவுகிறது. 
மேலும் தினசரி இதை சருமத்தில் தடவுவது மூலம் சருமத்தை நாம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள முடியும். 

தக்காளியில் எண்ணற்ற வைட்டமின்கள் இருப்பதால் அவை நமது சருமத்திற்கு பல நன்மைகளை செய்கிறது. சருமத்தை எளிமையாக பாதுகாக்க நாம் எளிமையாக தக்காளி சாறை பயன்படுத்தலாம்.

ஒரு இதழில் வெளிவந்த ஆய்வின்படி தக்காளியை தினசரி உண்பதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோயால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க முடியும். 
மேலும் டைப் 2 நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கலான வீக்கம், திசு சேதம் போன்ற பிரச்சனைகளையும் இது குறைக்கிறது. எலியின் மீது மேற்கொண்ட ஒரு ஆய்வில் இது கண்டறியப்பட்டது. 

ஆனால் இதை உறுதி செய்ய மனிதர்கள் மீதும் சோதனை செய்ய வேண்டும். சரி இனி சுவையான அன்னாசி – தக்காளி இனிப்பு பச்சடி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையானவை:
நன்கு பழுத்த சிவப்பான தக்காளி – அரை கிலோ,

அன்னாசிப்பழம் – 1 கீற்று,

சர்க்கரை – சுவைக்கேற்ப,

ரோஸ் எசன்ஸ் – சில துளிகள்,

கார்ன்ஃப்ளார் – 1 டீஸ்பூன்.

செய்முறை:
அன்னாசி – தக்காளி இனிப்பு பச்சடி
தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். அன்னாசிக் கீற்றை தோல் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். தக்காளியுடன் சர்க்கரை, அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்து குறைந்த தீயில் நன்கு கொதிக்க விடுங்கள்.
கொதித்து சற்று சேர்ந்தாற் போல, தளதளவென வந்ததும் கார்ன் ஃப்ளாரை அரை கப் தண்ணீரில் கரைத்து சேருங்கள். நன்கு கொதித்ததும், இறக்கி ரோஸ் எசன்ஸ் சில துளிகள் விட்டுப் பரிமாறுங்கள். 

குட்டீஸுக்குப் பிடித்தமான இந்தப் பச்சடி, பிரெட் முதல் பீட்ஸா வரை எல்லா வற்றுக்கும் பொருத்தமான காம்பினேஷன்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)