உளுத்தம் பருப்பு கூட்டு செய்வது எப்படி? #Koottu





உளுத்தம் பருப்பு கூட்டு செய்வது எப்படி? #Koottu

நம் உடல் உறுப்புகளை புதுப்பித்து உளுந்துபோகாமல், ஆற்றல் தருவதால் தா‌ன் இதற்கு உளுந்து என பெயர் வந்தது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தானிய வகைகளில் உளுந்து முக்கிய இடத்தில் உள்ளது. 
உளுத்தம் பருப்பு கூட்டு செய்வது
உளுத்தம் பருப்பு அல்லது உளுந்து என்பது இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தோன்றிய ஒரு வகை பயிராகும். இது நாடு முழுவதும் உள்ள இந்தியர்களால் பரவலாகப் பயிரிடப்படுகிறது. 
சுவை மட்டுமின்றி உளுத்தம் பருப்பில் பல நன்மைகள் அடங்கியுள்ளன.  தென் இந்திய உணவுகளில் குறிப்பாக நம்ம ஊர் தோசை, இட்லி, மெது வடை போன்ற உணவுகளின் முக்கிய மூலப்பொருள் உளுந்து தான். 

உளுந்து ஏராளமான கனிமங்களையும், ஊட்டச் சத்துகளையும் கொண்டுள்ளது. உளுந்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. 

இந்த நார்ச்சத்துக்கள் நீங்கள் உண்ணும் உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் உணவில் உள்ள ஊட்டச் சத்துக்களையும் உங்கள் உடல் உறிஞ்ச உதவுகின்றன. 

மேலும் நார்ச்சத்தானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது. உளுத்தம் பருப்பில்  தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. 
அவை அனைத்து விதமான தோல் எரிச்சலையும் குறைக்க உதவும். அதிக ஆக்ஸிஜனேற்ற ரத்தத்தை உங்கள் உடலுக்கு கொண்டுவருகிறது. மேலும் இது பளிச் என்ற ஒளிரும் சருமத்தை அளிக்கிறது. 

உளுந்து உங்கள் உலர்ந்த மற்றும் உடையக்கூடிய தலை முடியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உளுந்து நம் உடலில் யூரிக் அமில அளவை கணிசமாக உயர்த்துவதால் சிறுநீரக கற்கள், பித்தப்பை சிக்கல் உள்ளவர்களுக்கு இது மிகவும் அத்தியாவசியமானது. 

உடலில் ஆக்சிஜன் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?

கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உளுந்தை மிதமாக உட்கொள்ள வேண்டும். மேலும் தகவலுக்கு உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது எப்போதும் நல்லது. 

உடைத்த உளுத்தம் பருப்பால் செய்யப்படும் இந்த உணவு முகலாயர்களின் விருப்பமான உணவு. நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு - ஒரு கப்
நெய் - 1 Tsp

பட்டை - 1 இஞ்ச்

கிராம்பு - 3

காய்ந்த மிளகாய் - 3

வெங்காயம் - 1

பூண்டு - 3

இஞ்சி - 1 துண்டு

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

மிளகாய் தூள் - 1/4 Tsp

தனியா தூள் - 1 Tsp

மஞ்சள் தூள் - 1/4 Tsp

கரம் மசாலா - 1/4 Tsp

கொத்தமல்லி - சிறிதளவு

கருவேப்பிலை - சிறிதளவு

தண்ணீர் - 3 கப்

தாளிக்க :

நெய் - 1 Tsp

சீரகம் - 1 Tsp

உடைத்த மிளகு - 1 Tsp

செய்முறை :
உளுந்தைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் நெய் விட்டு காய்ந்த மிளகாய், பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டை போடவும்.

அடுத்ததாக வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் தக்காளி போட்டு வதக்கவும். வதங்கியதும் மஞ்சள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.
ஊற வைத்துள்ள உளுந்தை போட்டு மூன்று கப் தண்ணீர் ஊற்றவும். 5-6 விசில் வரும் வரை காத்திருக்கவும். விசில் முடிந்ததும் தானாக பிரஷர் இறங்கும் வரை காத்திருங்கள். 
பின் திறந்து தேவையான அளவு உப்பு சேர்த்து மற்றொரு பாத்திரத்தில் மாற்றவும். நெய், சீரகம், மிளகு போட்டு தாளித்து பருப்பில் ஊற்றவும். உளுத்தம் பருப்பு கூட்டு தயார். பரிமாறவும்.