சுவையான பிரட் ரெய்தா செய்வது எப்படி?





சுவையான பிரட் ரெய்தா செய்வது எப்படி?

சுமார் 90% தண்ணீரை கொண்டிருப்பதால் வெள்ளரிக்காய் ஒரு சிறந்த ஹைட்ரேட் மற்றும் கூலிங்கான உணவாக இருக்கின்றன. சாலட்ஸ், சாண்ட்விச்சஸ் என பல வெரைட்டிகளில் கலந்து சாப்பிட வெள்ளரிகள் நமக்கு சிறந்த தேர்வாக இருக்கின்றன. 
பிரட் ரெய்தா செய்வது எப்படி?
ஒன்றுமே இல்லாவிட்டால் கூட வெள்ளரிக்காயை வெட்டி அதன் மீது உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவி சாப்பிட்டாலே மிகவும் சுவையாக இருக்கும். வெள்ளரிகள் பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பி உள்ளன. 
மார்பகம், கருப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் லிக்னான்ஸ் எனப்படும் பாலிபினால்கள் வெள்ளரிகளில் உள்ளன. கலோரிகள் குறைவாகவும், 

ஃபைபர் சத்து அதிகமாகவும் இருப்பதால் எடை இழப்பு மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கு வெள்ளரி பெரிதும் உதவுகிறது. நம் பலருக்கும் பிரெட் என்றால் அலாதி பிரியம். 

ஆனால் அதில் அதிகமான கலோரி இருக்கிறது. சப்பாத்திக்கு பிறகு நம்மில் பல பேர் விரும்பி சாப்பிடும் உணவு பிரெட். இந்த பிரட்டில் பலவிதமான உணவுகளும் சமைத்து சாப்பிடலாம். 

பிரெட் பட்டர் மசாலா, மற்றும் டீ ஒரு நல்ல மாலை உணவாக அமைகிறது. மேலும் பிரட் ஆம்லெட், பிரட் உப்புமா பிரெட் அல்வா, என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். 

அசத்தலான சீஸ் பிரெட் போண்டா செய்வது எப்படி?

அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது, உங்கள் சுவையை தூண்டும் மசாலா பிரட் ரெய்தா சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பிரட் ரெய்தா ரெசிபியை சமைத்து அசத்தலாம்.

தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 4,

புளிக்காத தயிர் - 250 மில்லி,

சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,

வெள்ளரிக்காய் - 1, 

வெங்காயம் - சிறிதளவு, 

தக்காளி - சிறிதளவு, 

கொத்த மில்லி - சிறிதளவு,

உப்பு - தேவையான அளவு.
செய்முறை:

ஒரு அகன்ற பாத்திரத்தை நன்கு கழுகி எடுத்துக் கொள்ளவும். அதில் இந்த 4 பிரெட் துண்டுகளை சிறிது சிறிதாக வெட்டி அதில் போடவும். 

வெள்ளரிக்காயையும் நன்கு கழுவி விட்டு துண்டு துண்டாக வெட்டி அதில் போடவும். அதே போன்று வெங்கயம், தக்காளி, கொத்த மில்லி இவை அனைத்தையும் சேர்த்து வெட்டி போடவும். 

பிறகு நன்றாக கலந்து விட்டு புளிக்காத தயிரை அதனுடன் சேர்த்து நன்கு ஒன்றுடன் ஒன்று சேரும்படி கலக்கவும். இதன் பிறகு சிறிது நேரம் கழித்து அதனுடம் சர்க்கரை சேர்த்து கலந்து வைக்கவும். 

இப்போது சுவையான பிரட் ரெய்தா ரெடி. இதே முறையில் ஸ்வீட்கார்ன், பழங்கள் சேர்த்து தித்திப்பு ரெய்தாவும் செய்யலாம்.
Tags: