பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப் படுகிறது.
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.
இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
தேவையான பொருட்கள் : .
கோதுமை மாவு – 1 கப்
பனங்கற்கண்டு – ¼கப்
நெய் – ¼ கப்
சுக்கு தூள் – ½ தேக்கரண்டி
பால் – 2-3 மேஜைக்கரண்டி
செய்முறை : .
பனங்கற்கண்டை எடுத்துக் கொள்ளவும் (இதற்கு பதிலாக சர்க்கரை அல்லது வெல்லம் பயன் படுத்தலாம்). பனங்கற்கண்டை மிகசியில் போட்டு தூளாக்கவும்.
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்க்கவும்.நன்கு கலக்கவும்.சிறிது பால் சேர்க்கவும்.நன்கு கலக்கவும்.
சுக்கு தூள் சேர்க்கவும். கோதுமை மாவு சேர்க்கவும். அதனை நன்கு பிசைந்து கொள்ளவும் தேவைப் பட்டால் சிறிது பால் சேர்க்கவும். ஒரு பிளாஸ்டிக் கவரை விரித்து அதன் மீது பிசைந்த மாவை எடுத்துக் கொள்ளவும்.
வேறெரு பிளாஸ்டிக் கவரால் மாவை மூடி வைக்கவும். பின்பு அதனை படத்தில் உள்ளது போல் விரித்துக் கொள்ளவும். அதன் மேலுள்ள கவரை நீக்கி விட்டு அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அவற்றை கரண்டியால் எடுத்து பேக்கிங் ஷீட்டில் வைக்கவும். பின்பு அதனை மைக்ரோ வேவ் அவனில் வைத்து சூட்டெடுக்கவும். அவற்றை ஆற வைத்து காற்று புகாத டப்பாக்களில் வைத்து ஒரு வாரம் வரை பயன் படுத்தலாம்.