தண்ணீரை அண்ணாந்து குடிக்கலாமா?





தண்ணீரை அண்ணாந்து குடிக்கலாமா?

நீர் இன்றி அமையாது உலகு என்பார்கள். நீர் இன்றி உயிர்களின் நல்ல ஆரோக்கியமும் கூட அமையாது தான். எந்த உயிரினமாக இருந்தாலும், தண்ணீர் மிக அவசியமான ஒன்று. உணவின்றி கூட வாழ்ந்து விடலாம். 
தண்ணீரை அண்ணாந்து குடிக்கலாமா?
ஆனால், நீரின்றி இரண்டு நாட்களை கடப்பதே பெரிது. நீரை சாப்பிட வேண்டும், உணவை குடிக்க வேண்டும் என்ற பழமொழி உண்டு உணவை வாயில் நன்றாக மென்று, கூழாக்கி, நீராகாரமாக குடிக்க வேண்டும் என்பதே அதன் பொருள்.

வீட்டில் நாம் இருக்கையில் பெரும்பாலும் நீரை வாய் வைத்து, கட்டில் அல்லது தரையில் அமர்ந்து குடித்திருப்போம். ஆனால், சிலர் வாயை வைத்து தண்ணீர் குடித்தால் கண்டிப்பார்கள். 

பணியிட சூழல் மற்றும் பிற காரணங்களுக்காக நீரினை நாம் நின்று கொண்டே குடிப்போம்.  நம்முடன் இருந்த தாத்தா, பாட்டி ஆகியோர் அதற்கான காரணத்தை நம்மிடையே தெளிவுபடுத்தவில்லை. 

நாமும் அவர்களின் பால் இருந்த நம்பிக்கையில், அதன் விபரத்தை கேட்டறியாமல் இருந்து விட்டோம். இன்றளவில் உள்ள சிறுவர்கள் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பதால், கேள்விகளை எழுப்புகின்றனர். 
அந்த வகையில், நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் அது வயிற்றில் தெரிந்து விழும். இதனால் வயிற்றில் வேகமாக செல்லும் நீர், உடலின் உறுப்புகளில் தாக்கத்தை உண்டாக்கும். 

குடல் மற்றும் செரிமான இயக்கத்தை பாதிக்கும். சிறுநீரகத்தின் வடிகட்டுதல் தன்மை பாதிக்கும். உடலின் நீர் சமநிலை பாதிக்கப்படும். 
தண்ணீரை வாய் வைத்து மெல்ல குடிப்பதே நல்லது என்று ஆயுர்வேத முறை கூறுகின்றன. அண்ணாக்க ஆ போட்டு தண்ணீரை மடமடவென குடித்தால் தைராய்டு பாதிப்பு கூட ஏற்படலாம். 

வெளியே செல்லும் இடங்களில் நீரை அண்ணாந்து குடித்தாலும், வீட்டில் இயல்பாக குடிப்பது நல்லது. 

அண்ணாந்து கடகட என தண்ணீர் குடிப்பவர்களுக்கு டான்சில் நோய் வர வாய்ப்புள்ளது. தொண்டை வழியாக தண்ணீர் கடக்கும் போது, டான்சில் என்ற பகுதி வேகமாக வேலை செய்ய வேண்டியுள்ளது.

எனவே அதில் நோய் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். நீங்கள் அண்ணாந்து தண்ணீர் குடிக்கும் போது தண்ணீர் குடிப்பது, வயிற்றில் தெறித்து விழும்படி ஆகிறது.

திடீரென வயிறில் வேகமாக தண்ணீர் செல்வது, அருகே அமைந்திருக்கும் உடல் உறுப்புகளில் தாக்கத்தை உண்டாக்கும். முக்கியமாக குடல் மற்றும் செரிமான மண்டல இயக்கத்தை பாதிக்கும்.

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது, சிறுநீரகத்தின் வடிக்கட்டுதல் தன்மையை பாதிப்படைய செய்யும் என கூறப்படுகிறது.
சரியாக வடிகட்டுதல் ஆகாவிடில், சிறுநீரக கோளாறுகள், சிறுநீர் பாதை தொற்று / கோளாறுகள் உண்டாகலாம்.

ஆயுர்வேத முறையில் தண்ணீரை வாய் வைத்து, மெல்ல, மெல்ல சிப் செய்து குடிப்பது தான் நல்லது என கூறப்பட்டிருக்கிறது. மேலும், தண்ணீரை வேகமாக குடிப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

ஒருவர் ஒரு நாளுக்கு எட்டு டம்ளர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், நீங்கள் தண்ணீர் குடிக்கும் வகை கூட உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது நீங்களே சொல்லுங்கள் தண்ணீரை அண்ணாந்து குடிக்கலாமா?
Tags: