சமையல் டிப்ஸ்..... !





சமையல் டிப்ஸ்..... !

* இட்லிக்கு உளுந்து அரைக்கும் போது ஃபிரிட்ஜ் வாட்டர் ஊத்தி அரைங்க. மாவு நல்லா பொங்கி வரும்.
இட்லி மாவு புளிச்சு போச்சுன்னா
* இட்லி மாவு புளிச்சு போச்சுன்னா மாவுல ஒரு ரெண்டு சொம்பு தண்ணி ஊத்தி நல்லா கலக்குங்க. 

அந்த பாத்திரத்தை அப்படியே வெச்சு இருந்து ஒரு பத்து பதினைஞ்சு நிமிசம் கழிச்சு மேல நிக்கற தண்ணிய மட்டும் வடிச்சுட்டு தோசை ஊத்தினா நமக்கு புளிக்காத தோசை ரெடி. 

இல்லை என்னால அத்தனை நேரம் வெயிட் செய்ய முடியாதுன்னு சொல்ற அவசர பார்ட்டியா? ஒரு அரை டம்ளர் பாலு சேர்த்து கலக்கி ஊத்துங்க. இப்ப புளிப்பு கம்மியாகி வாயில வெக்கலாம் ரேஞ்சுக்கு இருக்கும்.

* சப்பாத்தி மிருதுவா இருக்கணுமா? சூடு தண்ணியும் பாலும் ஊத்தி பிசைய சொல்லுங்க. சப்பாத்தி நிறைய மீதியாகி போச்சா. மொட்டை மாடில கொண்டு போயி அதை காய வைங்க. 
அது காஞ்சு உடையற மாதிரி ஆனவுடன் எண்ணெய்ல பொரிச்சு சாப்பிட்டு பாருங்க. தோசையையும் இதே மாதிரி உபயோக படுத்தலாம்.

* கஷ்டப்பட்டுநாம வெண்பொங்கல் செஞ்சு தருவோம். நம்ம குழந்தைங்க அதுல இருக்கற மிளகை மட்டும் தனியா எடுத்து வெச்சு இருப்பாங்க. மிளகு உடம்புக்கு ரொம் பநல்லதாச்சே. 

அதனால பொங்கல் செய்யும் போது மிளகை லேசா வறுத்து பொடி செஞ்சு போடுங்க. இப்ப என்ன செய்வாங்க? இப்ப என்ன செய்வாங்க?

* பிஸ்கட்டுகள் நமுத்துப் போகாமல் இருக்க, மெல்லிய துணியில் சிறிது சர்க்கரை போட்டு, மூட்டை போல் கட்டி, பிஸ்கட் டப்பாவில் போட்டு விடுங்கள்.

* பேகான் ஸ்பிரே பாட்டிலுக்குள், ஊதுபத்தியை போட்டு எடுத்து,ஏற்றி வைத்தால், கொசுக்கள்,  பூச்சிகள் அண்டாது. 

* சர்க்கரையுடன் ஒன்றிரண்டு கிராம்புத் துண்டுகள் போட்டால், எறும்பு வராது. 

* கறிவேப்பிலை இலைகளை அரிசியுடன் போட்டு வைத்தால், பூச்சிகள், வண்டுகள் எட்டிக் கூட பார்க்காது.

* வெயில் காலத்தில் பால் திரிந்து போகாமல் இருக்க, பாலுடன் நான்கைந்து நெல் விதைகளைப் போட்டு வைக்கலாம். 
எறும்பு வராது
* வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால், கண் எரிச்சல் ஏற்படாது.

* பூண்டை வெயிலில் வைத்து எடுத்தால், தோலை எளிதில் உரிக்கலாம்.

* பூண்டை எளிதில் உரிக்க இன்னொரு ஐடியா. பூண்டில் தண்ணீர் ஊற்றாமல் மிக்சியில் அரைத்தால், தோல் அனைத்தும் மேலே எழும்பி, ஜாரின் மேற் புறத்தில் ஒட்டிக் கொள்ளும். கீழே உரித்த பூண்டு, மையாய் அரைந்திருக்கும். ஒரே நேரத்தில் இரு வேலை!

* சாம்பார், வற்றல் குழம்பு ஆகியவற்றில் காரம் அதிகமாகி விட்டால், நல்லெண்ணெயை ஊற்றி கொஞ்சம் கொதிக்க விடுங் கள்.காரம் குறைந்து விடும், குழம்பின் வாசனையும் நன்றாக இருக்கும். 
ஆனால், குருமா போன்ற கிரேவியான ஐட்டங்களில் காரம் கூடினால், ஒரு ஸ்பூன் வெண் ணெய் போட்டு கொதிக்க வையுங்கள். காரம் குறைந்து விடும்.

* குழம்பில் புளி அதிகமாகி விட்டால், சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்பு சுவை உடனே சரியாகி விடும்.

* சாம்பாரில் சில சமயம் பருப்பு சேராமல் நீர்க்க இருக்கும். அப் போது துவரம் பருப்பு சிறிது எடுத்து மிக்சியில் அரைத்து சாம்பாரில் சேர்த்துநன்கு கொதிக்க விடுங்கள். 

சாம்பார் கெட்டியாகி விடும். அரிசி மாவு கரைத்து விடுவதை விட, இவ்வாறு செய்வதுசாம்பாரின் ருசியை அதிகரிக்கும்.

* ரோஸ்ட் செய்யும் கறிகளில், எண்ணெய் அதிகமாகி விட்டால், கறிகளின் மேல் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை தூவினால், கறியின் எண்ணெயை அரிசிமாவு உறிஞ்சிக் கொண்டு விடும்; 

கறியும் மொறு மொறுப்பாக இருக்கும். கடலை மாவும் தூவலாம்.ஆனால், கடலை மாவு சுவையை கூட்டினாலும் கறிகளுக்கு மொறு மொறுப்பை தராது.

* பாயசம் நீர்த்து விட்டால் எந்த பாயசமாக இருந்தாலும் சரி இரண்டு டீஸ்பூன் சோள மாவு அல்லது பால் பவுடர் (ப்ளெயின்) கரைத்து பாயசத்தில் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க விட்டால் பாயசம் கெட்டியாகி விடும்.
பாயசம் நீர்த்து விட்டால்
* சாதம் வேகாமல் நறுக்கரிசியாக இருந்தால், சாதத்தின் மேல் சிறிது தண்ணீரை தெளித்து குக்கரில் வைக்கவும். 

ஆவி வந்ததும், ”வெயிட்’ போட்டு உடன் அணைத்து விடவும். சத்தம் அடங்கியவுடன் குக்கரை திறந்தால் சாதம் பூவாக வெந்து இருக்கும்.

* சில சமயங்களில் தண்ணீர் நன்றாக இல்லாவிட்டால், சாதம் நிறம் சற்று மங்கலாக இருக்கும். 

அப்போது அரிசி களைந்து குக்கரில் வைக்கும் போது சில சொட்டு எலுமிச்சை சாறு விட்டு வைத்தால், சாதம் பொல பொல வென்றும் வெண்மையாகவும் இருக்கும்.

* ரசத்தில் புளி குறைந்து விட்டால், கைவசம் மாங்காய் பொடி இருந்தால் போதும். 1/4 டீஸ்பூன் பொடி தேவையான புளிப்பை தந்து விடும்.
* தோசை மாவு, இட்லி மாவு மிகவும் புளித்து விட்டால், ஒரு டம்ளர் பால் ஊற்றினால் போதும் புளிப்பை போக்கி விடும். 

* வாங்கி சில நாட்கள் ஆகிவிட்ட காலிபிளவர், முள்ளங்கி, முட்டைகோஸ், டர்னிப் ஆகியவை செய்யும் போது மிகவும் சகிக்க முடியாத வாடை ஏற்படும். 

இதை தவிர்க்க, சிறிது எலுமிச்சை சாறும், சர்க்கரையும் கலந்து சமைத்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். 

* தயிர் பச்சடி நீர்த்துப் போய் விட்டால், சிறிது நிலக்கடலையை வறுத்து நைசாக பொடி செய்து கலந்து விடலாம். இதனால், பச்சடி கெட்டியாவதோடு சுவையும், சத்தும் கூடும்.

* கேரட், பீட்ரூட், முள்ளங்கி ஆகியவைஉடலுக்கு அதிகம் நன் மை பயப்பவை. இவற்றில் தோ லை அரிந்து எறிந்து விடக்கூடாது. தோலுடன் சமைப்பதே சிறந்த முறை. 

* கீரை வகைகள் வேகும் போது அதிலிருந்து ஒரு வித நச்சுக் காற்று வெளியேறும்.

எனவே, வேகும் போது மூடி போட்டு மூடக் கூடாது.அவ்வாறு மூடினால் நச்சுக் காற்று கீரையிலேயே தங்கி உடலுக்கு கெடுதியை உண்டு பண்ணும். 
கீரை வகைகள் வேகும் போது
* அரிசி, தானிய வகைகளை அதிகளவில் நீரில் கழுவக் கூடாது. அதிலுள்ள தாதுக்கள், வைட்டமின்கள் தண்ணீரில் கரைந்து விடும்.

* தக்காளி சூப் செய்து நீண்ட நேரம் வைத்திருந்தால், அது அமிலத் தன்மை உடையதாக மாறி விடும். இதை தடுக்க சூப் இளஞ்சூடாக இருக்கும் போதே ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்க்க வேண்டும்.

*பருப்புகளை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். 
* உருளைக்கிழங்கை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது மஞ்சள், எண்ணெய் சேர்த்து, வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். 

* பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். இதனால், உடல் நலனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

* பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம்.
Tags: