தினமும் வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். முட்டையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் உள்ளன.
இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் வீக்கமும் குறையும். சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் முட்டை சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனை அதிகரிக்கிறது.
எனவே சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகள் முட்டைகளை சாப்பிடக் கூடாது. ஏற்கனவே அதிக எடை கொண்டவர்கள் முட்டையை சாப்பிடக்கூடாது. முட்டையில் அளவற்ற புரதச்சத்து நமக்கு கிடைக்கும்.
அது நாள் முழுவதும் நமக்குத் தேவையான ஆற்றலை வழங்கும். முட்டை சாப்பிட்டால் நாள் முழுவதும் பசி கட்டுக்குள் இருக்கும்.
உடல் எடையை குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் காலை உணவாக முட்டை எடுத்துக் கொள்ளலாம். பொரி அதிக கார்போ ஹைட்ரேட்டுகள் நிறைந்த தின்பண்டமாகும்.
பொரியில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு பொரி சாப்பிடுவதால் சரியாகும். மேலும் சீரான குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது. பொரியில் கார்போ ஹைட்ரேட் நிறைந்துள்ளது,
எனவே இது நமது உடலுக்கு தேவையான எனர்ஜியை வழங்கவல்லது. இத தினமும் சாப்பிட்டு வந்தா வாதம், கபம் சம்பந்தமான நோய்கள், வாந்தி வருவது போன்ற பிரச்சனைகள் காணாம போயிடும்.
பொரித்த உணவை அதிகம் சாப்பிட்டால் வாந்தியும் வரலாம். வறுத்த உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது செரிமானத்தை மெதுவாக்குகிறது.
பல வறுத்த உணவுகள் ஜீரணிக்கப் படுவதில்லை, இது வாந்தி அல்லது சில கடுமையான சந்தர்ப்பங்களில், வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும்.
புற்றுநோயினைத் தடுக்கும் கேரட் !
தேவையான பொருட்கள் :
முட்டை - 2
பொரி - 1 கப்
வெங்காயம் - 2
கொத்தமல்லி சட்னி - 2 ஸ்பூன்
கேரட் - 2
ப.மிளகாய் - 2
பீட்ரூட் - 2
கொத்தமல்லி தழை - 1 கையளவு
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
முட்டை வெஜிடபிள் பொரி சாலட்
செய்முறை :
ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட், பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொரியை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி சட்னி, துருவிய கேரட், பீட்ரூட் மற்றும் கொத்தமல்லி தழை ஆகியற்றை சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும்.
பின், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து, உடன் எலுமிச்சை சாறு, நறுக்கிய முட்டையை கலந்தால், சுவையான முட்டை வெஜிடபிள் பொரி சாலட் தயார்.