நோன்பு ஆரம்பிக்கும் முன் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் !





நோன்பு ஆரம்பிக்கும் முன் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் !

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் கருதப்படுகிறது. இந்த ரமலான் மாதம் இஸ்லாமியர் களுக்கு சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற் கான ஒரு வாய்ப்பு மட்டுமல்ல, 
நோன்பு ஆரம்பிக்கும் முன்
இந்த மாதம் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கொண்டு செல்வதற்கான வாய்ப்பை தருகிறது. கொளுத்தும் கோடையுடன், கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், 
ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும் போது, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மிகவும் முக்கியம். இதன் மூலம் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம்.

செஹ்ரி காலம் என்பது ஃபஜர் தொழுகைக்கு முன் விடியற் காலையில் உட்கொள்ளும் உணவு காலமாகும். 

இந்த காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டால் தான், உடலுக்கு முழு ஊட்டச்சத்து கிடைத்து, நாள் முழுவதும் உணவின்றி உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.

ஆரோக்கிய பிரச்சனைகள்
ஆரோக்கிய பிரச்சனைகள்
நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் உடல் நலம் மற்றும் காலை உணவுத் திட்டங்களை சரிசெய்வதற்கு ரமலான் ஒரு சிறந்த காலம். 

இந்த காலத்தில் உண்ணாவிரதம் இருக்கும் நபர்கள் சற்று மந்தமாக அல்லது மலச்சிக்கலை சந்திக்கக்கூடும். பலருக்கு தலைவலி அல்லது குறைந்த இரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய பிரச்சனை களையும் சந்திப்பார்கள். 

இப்படி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் செஹ்ரி காலத்தில் சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணாதிருப்பது தான். 
ஆகவே செஹ்ரி காலத்தில் வெவ்வேறு உணவுகள் அடங்கிய சமச்சீரான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது மிகவும் முக்கியம்.

செஹ்ரியின் முக்கியத்துவம் என்ன?

செஹ்ரி, அதன் மத காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுவது மட்டுமல்லாமல், இது மிகவும் முக்கியமானது. 
செஹ்ரியின் முக்கியத்துவம் என்ன?
ஏனென்றால் 12 மணி நேரம் உணவு மற்றும் நீர் இல்லாமல் உண்ணாவிரதம் மேற்கொள்கிறீர்கள். எனவே செஹ்ரி காலத்தில் நல்ல ஊட்டச்சத்துள்ள மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். 

கீழே செஹ்ரி காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப் பட்டுள்ளன.

கார்போஹைட்ரேட் உணவுகள்
கார்போஹைட்ரேட் உணவுகள்
காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவுகளான பிரட், சாதம், உருளைக்கிழங்கு போன்றவை செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் மற்றும் நாள் முழுவதும் ஆற்றல் அளவை நீடித்து வைத்திருக்கும். 
இருப்பினும், உணவில் அளவுக்கு அதிகமாக காரம் சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் கார உணவுகள் அஜீரண கோளாறு மற்றும் நெஞ்செரிச்சலை உண்டாக்கலாம்.

நார்ச்சத்துள்ள உணவுகள்
நார்ச்சத்துள்ள உணவுகள்
நார்ச்சத்துள்ள உணவுகள் நீண்ட நேரம் பசி எடுக்காமல் நிரப்புவதோடு, மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும்.

ஆகவே நார்ச்சத்து நிரம்பிய பழங்களான ஆப்பிள், வாழைப்பழம், ஆப்ரிகாட் போன்ற பழங்களையும் செஹ்ரி உணவின் போது சேர்த்துக் கொள்ளுங்கள். 

பழங்கள் மட்டுமின்றி, முழு தானியங்களான கொண்டைக்கடலை, பார்லி மற்றும் ஓட்ஸ் போன்றவையும் சேர்த்து கொள்வது நல்லது. இவற்றில் மற்ற ஊட்டச் சத்துக்களும் நிரம்பியுள்ளன.

புரோட்டீன் உணவுகள்
புரோட்டீன் உணவுகள்
உண்ணும் உணவில் புரோட்டீன் இருக்க வேண்டியது அவசியம். இது மிகவும் அத்தியாவசிய மான ஊட்டச்சத்து. 

நிபுணர்களின் கூற்றுப்படி, உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையை வாழும் சராசரி மனிதனின் உடலுக்கு 1.2 கிராம்/கிலோ உணவு தேவைப்படுகிறது 
மற்றும் கொழுப்பு அதிகரிப்பைக் குறைக்க முயச்சிப்பவர் களாக இருந்தால், 3.3 கிராம்/கிலோ தேவை. ஆகவே புரோட்டீன் நிறைந்த உணவுகளான பால், முட்டை, சிக்கன், மட்டன், தயிர் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றை அதிகம் உண்ணவும்.

முழு திருப்தியைத் தரும் மற்றும் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவான உணவுகள்
முழு திருப்தியைத் தரும் மற்றும் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவான உணவுகள்
நட்ஸ், விதைகள் போன்றவை நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருப்பதோடு, உணவின் மீதுள்ள ஆவலைக் குறைக்கும். ஆகவே இவற்றை சில பழங்கள் மற்றும் சாலட்டுன் சேர்த்து உட்கொள்ளலாம். 

மேலும் இந்த வகை உணவுகள் ஒரு முழு உணவாக இருப்பதோடு, தாமதமாக செரிமானமாகும் மற்றும் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க உதவும். காபி, டீ கூடாது

ரமலான் நோன்பு கோடைக் காலத்தில் என்பதால், 12 மணிநேரம் நீர் அருந்தாமல் இருப்பது என்பது ஆரோக்கி யத்திற்கே ஆபத்தானது. 
இருப்பினும், நோன்பு ஆரம்பிப்பதற்கு முன் உண்ணும் செஹ்ரி உணவின் போது, நல்ல நீர்ச்சத்துள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். 

மேலும் காபி, டீ போன்ற காப்ஃபைன் அதிகம் நிறைந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் காப்ஃபைன் உடலில் இருந்து அதிக நீரை இழக்கச் செய்யும். 

அதே சமயம் ஒரே வேளையில் அதிகளவு நீரைக் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

நீர்ச்சத்துள்ள உணவுகள்
நீர்ச்சத்துள்ள உணவுகள்
நீர் அதிகம் குடிப்பதற்கு மாற்றாக நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களான வெள்ளரிக்காய், அன்னாசிப்பழம், தக்காளி, ஆரஞ்சு, தர்பூசணி, முலாம் பழம், வெங்காயம் போன்ற வற்றை அதிகம் சேர்க்கலாம். 
மேலும் இளநீரைக் குடிக்கலாம். இதில் எலக்ட்ரோலைட்டுக்கள் அதிகம்.
Tags: