நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி?





நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி?

வைட்டமின் C, கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளன. ஆனால், வைட்டமின் C சத்துக்கள் அதிகமாகவே உள்ளன. 
நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி?
நெல்லிக்காயில் 600 மில்லி அளவுக்கு வைட்டமின் C உள்ளதாம். நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுவது இந்த நெல்லிக்காய். தினம் ஒன்று சாப்பிட்டாலே போதும், எந்த நோயும் நம்மை அண்டாது. 

ஆஸ்துமாவுக்கு நெல்லிக்காய் நல்ல மருந்து என்றே சொல்லலாம்.. நெல்லிச் சாற்றில் தேன் கலந்து தினமும் 2 முறை குடித்து வந்தால் ஆஸ்துமா நீங்கும். 
ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ள காய் என்பதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை துவக்கத்திலேயே விரட்டி விடும். ரத்த சோகை உள்ளவர்கள், உடனடியாக இந்த இரும்புச்சத்து நிறைந்த நெல்லிக்காயை சாப்பிட வேண்டும். 

ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே, தலைமுடி உதிர்வு இருக்காது.. அதனால் தான் தலைமுடிக்கு தயாராகும் ஷாம்புகள், எண்ணெய்களில் இந்த நெல்லிக்காயை மூலப்பொருட்களாக அதிகம் பயன்படுத்துகிறார்கள். 

அல்லது நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலே முடி உதிர்தல் பிரச்சனை குறைந்து, முடியும் வளர்ச்சி பெறும். 

அதைவிட முக்கியமாக, கரோட்டின் சத்துக்கள் உள்ளதால் நரைமுடியை தடுக்கும் குணம் இந்த நெல்லிக் காய்களுக்கு உண்டு.. பொடுகு தொல்லையும் நீங்கி விடும். 
இந்த நெல்லிக்காய்களை குளிர்காலத்தில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. காரணம், குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் அதிகமாகி கடுமையான பாதிப்பை தந்துவிடலாம். 

உயர் ரத்த அழுத்தமும், சுவாச பிரச்சினையும் ஏற்படலாம். இதுபோன்ற நேரத்தில் கைகொடுத்து உதவுவது இந்த நெல்லிக்காய்கள் தான். 

இப்படி பல நன்மைகளை தரும் இந்த நெல்லிக்காயை, சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் தவிர்த்துவிட வேண்டும்.. காரணம், கால்சியம் ஆக்ஸைடு அதிகம் இந்த நெல்லிக்காயில் உள்ளதால், தவிர்ப்பது நல்லது என்கிறார்கள்.
தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய் - 12,

தேங்காய் - 1 துண்டு,

பச்சைமிளகாய் - 3,

புளிப்பில்லாத கெட்டித்தயிர் - 1 கப்,

பெருங்காயத்தூள் - சிறிது.

தாளிக்க...

கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிது,

எண்ணெய் - 1 ஸ்பூன்.
செய்முறை :
நெல்லிக்காய் தயிர் பச்சடி
நெல்லிக்காயை கொட்டையை நீக்கி மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாயை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள், தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 
கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளித்து தயிர் கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும். சூப்பரான சத்தான நெல்லிக்காய் தயிர் பச்சடி ரெடி.
Tags: