டேஸ்டியான பீர்க்கங்காய் பஜ்ஜி செய்வது எப்படி?





டேஸ்டியான பீர்க்கங்காய் பஜ்ஜி செய்வது எப்படி?

பொதுவாக வெப்பமண்டலப் பகுதிகளில் வளர்க்கப்படும் ஒரு சத்தான காய்கறி பீர்க்கங்காய். இந்த காயில் கலோரிகள் குறைவாக மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. 
பீர்க்கங்காய் பஜ்ஜி
ஹெல்தி டயட்டை பின்பற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு பீர்க்கங்காய் சிறந்த தேர்வாக இருக்கிறது. பீர்க்கங்காயில் Charantin என்ற காம்பவுன்ட் உள்ளது, இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. 
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது நீரிழிவு நிலைமையை உருவாக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு பீர்க்கங்காய் ஒரு சிறந்த காய்கறியாக அமைகிறது. 

இந்த காயில் உள்ள நார்ச்சத்து ரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கவும் உதவுகிறது.

பீர்க்கங்காயில் வைட்டமின் சி நிறைந்ததுள்ளது. வைட்டமின் சி என்பது ஒரு சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

இந்த பச்சை காய்கறியில் துத்தநாகம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பிற வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் உள்ளன. இவை ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க அத்தியாவசியமானவை.

பீர்க்கங்காயில் வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம் உள்ளிட்ட நிறைய சத்துகள் நிறைந்துள்ளன. உடலுக்கு குளிர்ச்சி தரும் பீர்க்கங்காயை கொண்டு சுவையான பீர்க்கங்காய் பஜ்ஜி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :

பீர்க்கங்காய் - 2

கடலை மாவு - 1 கப்

சோள மாவு - 1 கப்

சீரகப்பொடி - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

பேக்கிங் சோடா - 2 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
பீர்க்கங்காய் பஜ்ஜி செய்வதற்கு முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கி விட்டு, பின் அதனை வட்ட வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, சீரகப்பொடி, மல்லித்தூள், மிளகாய்த்தூள், பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு ஆகிய வற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடானதும், 
வட்டமாக நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் பீர்க்கங்காய் பஜ்ஜி ரெடி.
Tags: