ருசியான கத்திரிக்காய் கார மசியல் செய்வது எப்படி? #Tuvaiyal





ருசியான கத்திரிக்காய் கார மசியல் செய்வது எப்படி? #Tuvaiyal

சாம்பார், கூட்டு, பொரியல், புளிக்குழம்பு, பிரியாணிக்கான தொக்கு என்று தமிழர்கள் எந்த வெரைட்டியில் உணவை எடுத்துக் கொண்டாலும் அதில் தவறாமல் இடம்பெறும் மிக முக்கிய காயாக கத்திரிக்காய் இருக்கிறது.
கத்திரிக்காய் கார மசியல்
வெள்ளை நிற கத்திரிக்காய், பச்சை நிற கத்திரிக்காய், வயலெட் நிற கத்தரிக்காய் என்று வெவ்வேறு வண்ணங்களில், நம் மனம் கவர்ந்த சுவைகளில் கத்திரிக்காய் கிடைக்கிறது. 

பெயரளவில் இதனை காய் என்று குறிப்பிட்டாலும், இது பல வகையை சேர்ந்ததாக உள்ளது என்று தெரிவிக்கின்றனர். கத்திரிக்காயில் மெக்னீசியம், மேங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைவாக உள்ளன. 

இவை அனைத்தும் நம் எலும்புகளை வலுப்படுத்தும் மற்றும் எலும்புகளில் உள்ள அடர்த்தியை மேம்படுத்தும். நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை சீரான நிலையில் வைத்திருக்க கத்திரிக்காய் சாப்பிடலாம். 

இது குடல் நலனை மேம்படுத்தும். அது மட்டுமல்லாமல் உடலில் ரத்த சர்க்கரையை குறைக்க ஏதுவான இன்சுலின் உற்பத்தியை கத்திரிக்காய் ஊக்குவிக்கும்.

வழக்கமான பொரியல், வறுவல் போல இல்லாமல் கத்தரிக்காய் கார மசியல் ஒரு தனி சுவையுடன் இருக்கும். கத்திரிக்காய் வேண்டாமென்று சொல்பவர்கள் கூட கத்திரிக்காய் கார மசியலை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையானவை

கத்திரிக்காய் - 1ஃ2 கிலோ

பச்சை மிளகாய் - 6

வெங்காயம் - 2

தக்காளி - 1

பூண்டு - 12

சீரகம் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1ஃ4 ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப
செய்முறை
கத்திரிக்காயை அதன் தோல் பகுதி நிறம் மாறி பிரிந்து வரும் வரை நெருப்பில் வாட்டி எடுக்கவும். பிறகு கத்திரிக்காய் களை தண்ணீரில் போட்டு அதன் தோலினை பிரித்தெடுத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

ஒரு வானலியில் எண்ணெய் விட்டு சீரகம், பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். 
இதனுடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, மற்றும் மசித்த கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும். மசித்த கத்திரிக்காய் நன்கு வெந்தவுடன் அடுப்பி லிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்