பஃப்டு ரைஸ் என்று அழைக்கப்படும் பொரி செய்வது எப்படி?





பஃப்டு ரைஸ் என்று அழைக்கப்படும் பொரி செய்வது எப்படி?

பொரி, புழுங்கல் அரிசியில் இருந்து தான் தயாரிக்கப் படுகிறது. நெல்லை பக்குவமாக வேக வைத்து (நெல்லின் வாய் லேசாக விரியும் போது) எடுக்க வேண்டும். 
பஃப்டு ரைஸ் என்று அழைக்கப்படும் பொரி செய்வது எப்படி?
அதை வெய்யிலில் அதிகம் முறிந்து விடாமல் பார்த்து எடுக்க வேண்டும். காய்ந்த நெல்லை அரவை மில்லில் (அல்லது உரலில் இட்டு குத்த வேண்டும்) கொடுத்து அரைக்க வேண்டும். 
இதன் விளைவாக, தவிடு வேறாகவும் அரிசி வேறாகவும் கிடைக்கும். இந்தப் புழுங்கல் அரிசியில் தேவையான அளவு எடுத்து, உப்புக் கரைத்த நீரைத் தெளிக்க வேண்டும். 

ஐந்து நிமிடங்கள் ஆனதும் வெயிலில் ஈரம் போக காய வைக்க வேண்டும். வெய்யில் இல்லை எனில், வறுக்கும் பாத்திரத்தில் அரிசியைப் போட்டு ஈரம் போக, லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

நிறைய நேரம் வறுத்தால், அரிசி வறுபட்டு விடும். பிறகு பொரி கிடைக்காது. வறுத்த அரிசியை எடுத்து வைத்துக் கொண்டு, வறுக்கும் பாத்திரத்தில் உப்பு அல்லது மணல் போட்டு சூடேற்ற வேண்டும். 

அது சூடேறியதும் வறுத்து வைத்துள்ள அரிசியை போட்டு கிளறிக் கொண்டே வந்தால், வெண்ணிறத்தில் பொரி மலரும். 
பொரி சாப்பிட்டா இவ்வளவு பலன் இருக்கா

பஃப்டு ரைஸ் மற்றும் பெர்ச் அரிசி என்று அழைக்கப்படும் பொரி பலரின் விருப்பமான சிற்றுண்டி உணவாக உள்ளது. 

அதிலும், பொரியில் செய்யும் காரப்பொரி, மசாலா பொரி, பேல் பூரி போன்றவற்றின் பெயரைக் கேட்டாலே பலரின் நாக்குகளில் எச்சில் ஊறும். 

நெல்லில் இருந்து தாயரிக்கப்படும் இப்படிப்பட்ட பொரியில் நம்ப முடியாத ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளன என்பதை பலரும் உணர்ந்து இருக்கவே மாட்டோம். 

நார்ச்சத்து நிறைந்த பொரியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கலை போக்க முடியும். 
பொரியை தினசரி எடுத்துக் கொள்வதால், மலத்தில் உள்ள சளி மற்றும் அதிகப்படியான கொழுப்பின் அளவு குறைந்து, குடல் ஒட்டிக் கொள்வதைத் தடுக்கும். இதனால் மலம் கழிப்பது எளிதாகும். 

மலச்சிக்கல் ஏற்படாது. சக்தி வாய்ந்த செரிமானத் தூண்டுதலாக பொரி உள்ளது. 

பொரியில் உள்ள ஊட்டச்சத்துகள் வயிறு மற்றும் குடலில் உள்ள உணவுத் துகள்களை உடைத்து, செரிமானத்துக்கு தேவையான அமிலங்களின் சுரப்பை ஊக்குவிக்க செய்கிறது. 
மேலும், பொரி வயிற்றில் உள்ள வாயுவை அகற்ற உதவுகிறது. அதோடு, வயிற்றுக் கோளாறு, வீக்கம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் புண் மற்றும் வாயுப் பிடிப்புகள் போன்ற குடல் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகிறது.

பொரியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நோய்த் தொற்று, காய்ச்சல், ஜலதோஷம், தொண்டை புண் மற்றும் பிற சுவாசக் கோளாறுகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவி புரிகிறது. 

அதோடு, தினாமும் பொரியை உண்ணுவதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் மேம்படுத்த முடியும்.
Tags: