கேரளா ஸ்பெஷல் அவியல் செய்வது எப்படி? #Avial





கேரளா ஸ்பெஷல் அவியல் செய்வது எப்படி? #Avial

அவியல் என்பது உணவுக்கு துணைப் பொருளாக பயன்படும் ஒரு கூட்டு வகையாகும். இது தென் தமிழக மாவட்டமான கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் கேரளத்தின் பிரசித்திப் பெற்ற கூட்டு வகையாகும்.
கேரளா ஸ்பெஷல் அவியல்
அவியல் பல விதமான காய்கறிகளை கொண்டு செய்யப் படுகிறது. கேரட், பீன்ஸ், வாழைக்காய், முருங்கைக்காய், மாங்காய், உருளைக்கிழங்கு, பூசணிக்காய், மற்றும் விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். 

அதனுடன் தேங்காய் விழுது சேர்த்து செய்யப்படும் ஒரு சூப்பரான உணவு வகை. சுவையான அவியல் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

தென்னிந்திய உணவுகளில் கேரளா உணவுகள் தனித்துவமான சுவை கொண்டவையாக உள்ளன. இந்த உணவுகளில் அவியில் மிகவும் புகழ் பெற்ற சைடிஷ்ஷாக உள்ளது. 

இந்த கேரளா ஸ்டைல் அவியல் தயார் செய்வதில் சிலர் சிரம படுகின்றனர். இதற்காகவே மிகவும் ஈஸியான செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம்
தேவையான பொருட்கள்

1 மாங்காய்

1 வாழைக்காய்

1 முருங்கைக்காய்

1 உருளைக்கிழங்கு

1 கேரட்

5 பீன்ஸ்

5 கோவக்காய்

3 தேக்கரண்டி கெட்டித்தயிர்

1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்

1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்

உப்பு தேவையான அளவு
அரைக்க

4 தேக்கரண்டி தேங்காய்த் துருவல்

3 பச்சை மிளகாய்

1 தேக்கரண்டி சீரகம்

தாளிக்க

1 தேக்கரண்டி எண்ணெய்

1 தேக்கரண்டி கடுகு

சிறிதளவு கறிவேப்பிலை

செய்முறை

காய்கறிகளைக் கழுவி விட்டு, (தோல் நீக்கிய நீக்க வேண்டிய காய்கறி களை தோல் நீக்கி விட்டு), நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பிரஷர் குக்கரில் நறுக்கி வைத்த காய்கறிகள், உப்பு, மஞ்சள் தூள், மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மூன்று விசில் வைத்து வேக வைக்கவும்.

மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற் றுடன் சிறிதளவு தண்ணீர் சேர் த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

காய்கறிகள் வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுது, மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் 3 முதல் 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
பின்னர் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அவருடன் சேர்த்து கலக்கவும். சுவையான அவியல் தயார். இது அடை மற்றும் சூடான சாதத்துடன் சுவையாக இருக்கும்