ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்வது எப்படி?





ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்வது எப்படி?

பொதுவாகவே சூப் சாப்பிட்டால், நம்முடைய உடம்பில் உள்ள என்சைம்களை தூண்டுவதால், செரிமானம் சரிவர நடக்கும். அசிடிட்டியை குறைத்து, பசியை தூண்டும். 
ஆட்டுக்கால் பெப்பர் பாயா
கால் எலும்புகளை வைத்து சூப் செய்து சாப்பிடுவது, ஆண்களுக்கு மிகவும் பலத்தை தருகிறது. கலோரி கட்டுப்பாட்டை இந்த ஆட்டுக்கால் சூப் ஊக்குவிக்கிறது. 

பொதுவாக மூட்டுவலி முதுகுவலி மூட்டு தேய்மானம் போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளினால் அவதிப்படுபவர்களுக்கு இந்த ஆட்டுக்கால் சூப் மிகவும் நல்லது. இருதய தசைகளையும் பலப்படுத்தும். 
இந்த சூப், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற கனிமங்களின் ஆதாரமாக விளங்குகிறது. அத்துடன், கொலாஜன், ப்ரோளின், ஜெலட்டின், ஹியலுரோனிக் அமிலம் போன்றவையும் அதிகமாக உள்ளது. 

கொலஸ்ட்ரால் அளவு மேம்படுகிறது. இதய ஆரோக்கியம் அதிகரிக்கிறது. உடம்பில் உள்ள நச்சுகள் நீங்குகிறது.. ரத்த சர்க்கரை அளவு சீராகிறது. நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது.

ஆட்டுக்கால் பாயா என்றாலே முதலில் வந்து நிற்பது அதன் அபார ருசி தான். இதில் பெப்பர் சேர்த்து தரும் போது அதன் சுவையோடு அலாதி மணமும் இணைந்து கொள்கிறது. செய்து சுவைப்போமா, பெப்பர் பாயா..!

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கால் – 2

தக்காளி – ஒரு கையளவு (நறுக்கியது)

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

தனியாத்தூள் – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 10 கீறியது

பூண்டு – ஒரு கையளவு

மிளகு – 4 டீஸ்பூன் (குருணையாக அரைக்கவும்)

தேங்காய் – 1/4 மூடி (அரைத்து பால் எடுக்கவும்)

உப்பு – சிறிதளவு

செய்முறை:

ஆட்டுக்காலை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். 

குக்கரில் ஆட்டுக்கால், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகிய வற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், போதுமான உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
10 நிடங்கள் கழித்து 10 விசில் வந்ததும் கால் வெந்ததைப் பார்த்து, அரைத்து வைத்திருக்கும் தேங்காய்ப்பாலை ஊற்றி சிறிதுநேரம் கொதிக்க விட்டு இறக்கி விடவும்.

பாயாவை இறக்குமுன் குருணையாக அரைத்து வைத்திருக்கும் மிளகை சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது பெப்பர் பாயா ரெடி.
Tags: