பச்சை பயறில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. ஆரோக்கியத்தை தரக்கூடிய இதில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. கேன்சரை தடுக்க கூடியது.
உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியதும், முடி உதிர்வை தடுக்க கூடியதுமாகும். வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது.
அரிசியோடு பச்சை பயறு சேர்த்து பொங்கலாக சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் பெறும். பச்சை பயறை கொண்டு முடி உதிர்வதை தடுக்கும் உணவு தயாரிக்கலாம்.
அடுப்பில் நல்லெண்ணெய் காய்ந்தவுடன், சிறிது சிவப்பு மிளகாயை போடவும். அதில் பச்சை பயறு, தேவையான உப்பு சேர்த்து கிளறிய பின் எடுத்து சாப்பிடலாம். இது முடி உதிர்வை தடுக்கும்.
2 ஸ்பூன் பச்சை பயறு மாவு, சிறிதளவு மஞ்சள், கால் ஸ்பூன் குப்பை மேனி இலைப்பொடி, பசும்பால் ஆகியவற்றை கலந்து பெண்கள், முகத்தில் தடவி வர வேண்டும்.
அவ்வாறு செய்தால் முகத்தில் முடி வளர்வது தடுக்கப்படும். மேலும், முகம் பொலிவு பெறும். சரி இனி பச்சை பயிறு பயன்படுத்தி சோர்வை போக்கும் பச்சை பயிறு காய்கறி கஞ்சி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 1/2 கப்
பச்சை பயிறு - 1/2 கப்
கேரட் - 1
வெள்ளரிக்காய் - சிறிதளவு
பீன்ஸ் - 5
தக்காளி - 1
சாம்பார் வெங்காயம் - 1 கைப்பிடி
பூண்டு - 4
வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 5
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை
முதலில் அரிசி, பச்சை பயிறை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊற வையுங்கள்.
கேரட், வெள்ளரிக்காய், பீன்ஸ், தக்காளி, சாம்பார் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உடல் சோர்வை போக்கும் பச்சை பயிறு காய்கறி கஞ்சி
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதித்தவுடன் ஊற வைத்த அரிசி, பருப்பை போட்டு வேக வைக்கவும்.
அரிசி, பருப்பு பாதியளவு வெந்ததும் அதனுடன் உப்பு, காய்கறிகளை சேர்த்து வேக விடவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, வெந்தயம், பூண்டு போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
வதக்கிய வெங்காயம், தக்காளியை அரிசி கலவையுடன் சேர்த்து வேக விடவும்.
30 நிமிடங்கள் கஞ்சியானது நன்றாக கொதித்து அரிசி மற்றும் காய்கறிகள் வெந்தவுடன் கீழ இறக்கி அனைவருக்கும் பரிமாறலாம்.
சத்தான காய்கறி கஞ்சி ரெடி.