தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் நாம் மருத்துவரையே பார்க்க வேண்டியதில்லை என்ற வாசகத்தை அடிக்கடி கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால், ஆப்பிள்களின் விலை மிக அதிகம். எளிய மக்களுக்கு அது கொஞ்சம் எட்டாக்கனி தான்.
ஆனால், பாமர மக்களுக்கும் எளிமையாக கிடைக்கக் கூடிய வகையில் உள்ள வாழைப்பழங்களில் அது போன்ற சத்து கிடையாதா என்ன!
தமிழர்களைப் பொருத்த வரையில் மா, பலா, வாழை என முக்கனிகளில் ஒன்றாக வாழைப்பழம் முக்கியத்துவம் பெறுகிறது.
உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் முற்றாக வாழைப்பழத்தை ஒதுக்கி விடுகின்றனர்.
இருப்பினும் தினசரி வாழைப்பழம் சாப்பிடலாமா என்ற கேள்வி எழுகிறது. தினசரி சாப்பிடலாமா? சராசரி நபர்கள் பிற பழங்களைப் போலவே, தினசரி வாழைப்பழங்களை சாப்பிடுவதால் எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால், பொட்டாசியம் சத்தை தவிர்க்க வேண்டிய நபர்கள் அல்லது வாழைப்பழம் சாப்பிட்டால் உடனடியாக ரத்த சர்க்கரை ஏறுகிறது என்னும் நபர்கள் இதனை குறைத்துக் கொள்ளலாம்.
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மிக முக்கியமான எலெக்ட்ரோலைட் சத்தாக உள்ளது. இது நம்முடைய தசை இயக்கம் மற்றும் இதய நலன் ஆகியவற்றுக்கு மிக முக்கியமாகும்.
வாழைப்பழம் நல்லது என்றாலும், தினசரி அந்த பழத்தையே சாப்பிடுவதைக் காட்டிலும், வெவ்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை சுழற்சி முறையில் எடுத்துக் கொள்வது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தேவையான பொருட்கள்:
நன்கு கனிந்த வாழைப்பழம் – 1
முட்டை – 2
சர்க்கரை/உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து, அத்துடன் சர்க்கரை/உப்பு சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள கலவையை தோசைகளாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வாழைப்பழ முட்டை தோசை ரெடி!!!