சுவையான மோர் ரசம் செய்வது எப்படி?





சுவையான மோர் ரசம் செய்வது எப்படி?

குளிர்ந்த மோர் கோடை காலத்திற்கான ஒரு இனிமையான பானம். காலம் காலமாக கோடை காலத்தில் பருகும் அருமையான பானம் இது. இது எண்ணற்ற நன்மைகளையும் கொண்டுள்ளது. 
சுவையான மோர் ரசம் செய்வது எப்படி?
பாலில் இருந்து வெண்ணையை பிரித்தெடுத்த பின்னர், மீதம் உள்ள நீரைத் தான் மோர் என்கிறோம். தயிரில் நீர் கலந்து கரைத்தும் செய்யலாம். சந்தைகளில் பலவகையான மோர் கிடைக்கிறது. 
மோரில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் மோருடன் உப்பு சேர்த்து தினம் குடித்து வர உடல் மற்றும் சரும வறட்சி பிரச்சனைகள் நீங்கும்.

நாம் உண்ணும் உணவில் உள்ள கழிவுகளை போக்கி, உணவின் சத்துக்களை முழுமையாக உடலுக்கு கொண்டு சேர்க்கும் பணியை மோரில் உள்ள சேர்மங்கள் செய்கிறது. இதனால், கல்லீரலின் ஆரோக்கியம் மேம்படும்.

மலச்சிக்கல், செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மோர் குடிப்பது நல்லது. மோரில் காணப்படும் புரோபயோடிக்ஸ் என்ற பாக்டீரியாக்கள், உடலில் செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

நம் உடலில் சேரும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பணியை மோர் சிறப்பாக செய்கிறது. அந்த வகையில், மோர் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கி சருமம் பொலிவுறும்.

சுத்தமான ஈஸ்ட் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்.:

புளித்த தயிரை கடைந்த மோர் – 2 கப்,

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,

உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க.:

கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்,

கறிவேப்பிலை – சிறிதளவு,

காய்ந்த மிளகாய் – 2,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை.:
மோர் ரசம் செய்வது
மோருடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 3 நிமிடங்கள் கொதி விட்டு நிறுத்தவும். 
தாளிக்கக் கொடுத்துள்ள வற்றை தாளித்து மோரில் சேர்க்கவும். (விருப்பப்பட்டால் பெருங்காயத் தூளும் சேர்த்துக் கொள்ளலாம்).
Tags: