அவியல் பாண்டவ சகோதரர்களுள் ஒருவரான பீமனால் (பீமா) முதலில் கண்டு பிடிக்கப்பட்டது எனக் கருதப்படுகிறது.
விராட பருவத்தின் பொழுது விராட மன்னனின் அரண்மனையில் சமையல் காரனாக பணியில் சேர்ந்த பீமாவிற்கு முதலில் சமைக்கத் தெரியாது.
ஆயினும் அவர் சமையலறை யிலிருந்த பல காய்கறிகளை ஒன்றாக வெட்டி, அவற்றை துருவிய தேங்காயுடன் சேர்த்து கொதிக்க வைத்து அவியலை தயார் செய்தார்.
வேறு சிலக் கதைகளில், விராட மன்னனின் அரண்மனைக்கு ஒரு சமயம் எதிர் பாராத விருந்தினர்கள் சிலர் வந்தனர் என்றும், அவர்களுக்கு உணவு பரிமாற பீமன் பணிக்கப் பட்டார்,
ஆனால் தனிப்பட்ட காய்கறி கொண்டு உணவினை தயாரிக்க போதுமான காய்கறிகள் சமையலறையில் இல்லை.
அதனால் பீமன் கிடைத்த காய்கறிகள் அனைத்தையும் பயன்படுத்தி புதிய உணவினை தயார் செய்தார் என்றும் அதன் பெயரே அவியல் எனக் கருதப்படுகிறது.
சரி இனி வெள்ளரிக்காய் கொண்டு சுவையான கேழ்வரகு கிரிஸ்பி லட்டு செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
தேவையானவை:
கத்திரிக்காய் – 100 கிராம்,
உருளைக்கிழங்கு – 2,
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று,
பட்டை – சிறிய துண்டு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
அரைக்க:
தேங்காய் துருவல் – கால் கப்,
பச்சை மிளகாய் – 5,
பூண்டு – 3 பல்,
சோம்பு – ஒரு டீஸ்பூன்,
பொட்டுக் கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ள வற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து வேக விடவும். காய்கள் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்… ருசியான செட்டிநாட்டு அவியல் ரெடி!
இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற அவியல் இது.