தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக தேங்காய் பால் சிறந்தது என அமெரிக்காவின் புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் ஜோஷ் ஆக்ஸ் அவர்கள் நிரூபித்துள்ளார்.
தேங்காயை அரைத்து அதிலிருந்து பிரிக்கப்படும் பாலில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன.
இதில் நிறைந்துள்ள துத்தநாகம், லாரிக் அமிலம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருகின்றன.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் நம்முடைய இதயத்தை பாதுகாக்க கூடிய உணவுகளில் தேங்காய் பாலும் ஒன்று.
இதில் உள்ள லாரிக் அமிலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவுகளை குறைக்க உதவுகிறது. மேலும் நல்ல கொழுப்புகளை அதிகரிப்பதன் மூலம் உடலுக்கு பல நல்ல விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
தேங்காய் பால் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருப்பதன் மூலம் அதிகப்படியான உணவு உட்கொள்ளை கட்டுப்படுத்துகிறது.
இதை உங்களுடைய உணவில் சேர்த்து வர உங்களுடைய தினசரி கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்தலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு தேங்காய் பால் சிறந்த பலன்களை கொடுக்கும்.
தேவையானவை :
தேங்காய்பால் -2கப்
முட்டை-4
பச்சை மிளகாய்-2
வெங்காயம்-2
எலுமிச்சை சாறு-2டீஸ்பூன்
பூண்டு -4
சோம்பு-2
உப்பு -தேவையான அளவு
கருவேப்பிலை-தேவையான அளவு
எண்ணேய்-தேவையான அளவு
இலை -தேவையான அளவு
செய்முறை :
முதலில் வேக வைத்து நான்கு முட்டையை எடுத்து கொள்ளவும். பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, சோம்பு இரண்டையும் போட்டு வதக்கவும்.
அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.
வதக்கிய வற்றில் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
பின்னர் வேக வைத்த முட்டைகளை போட்டு அதில் உப்பு, எலுமிச்சை சாறு ஊற்றி கொதி நிலைக்கு வந்ததும் இலை தூவி பரிமாறலாம்.
குறிப்பு :
முட்டையில் அளவற்ற புரதச்சத்து நமக்கு கிடைக்கும். அது நாள் முழுவதும் நமக்குத் தேவையான ஆற்றலை வழங்கும். முட்டை சாப்பிட்டால் நாள் முழுவதும் பசி கட்டுக்குள் இருக்கும்.
இதனால் பிற உணவுகளின் அளவு குறைகிறது என்ற அளவில் உடல் எடையை குறைக்க இது உதவியாக அமையும்.
புரதச்சத்து மிகுதியாக கொண்ட முட்டை சாப்பிட்டால் நம் தசைகள் வலிமை அடையும் மற்றும் உடல் உறுப்புகள் இயல்பாக செயல்பட தொடங்கும்.
முட்டையில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் நம் உடல் வலிமை பெற உந்துசக்தியாக அமையும் மற்றும் நமக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.