பருப்பு வகைகள் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தவை. இது உடல் எடையை குறைப்பவர்களுக்கு நல்ல பயனை அளிக்கிறது. பருப்பில் கொழுப்புகள் இல்லை.
எனவே பருப்பு வகைகளை சாப்பிடுவது கலோரிகளை குவிக்காமல் சரியான அளவு ஆற்றலையும் ஊட்டச்சத்தையும் தரக் கூடியது. பருப்பு வகைகளில் உள்ள புரதமும் நார்ச்சத்தும் வயிற்றை நிரப்ப உதவுகிறது.
பருப்பு வகைகளை உட்கொள்வது உங்கள் பசியைக் கட்டுப்படுத்த உதவும் மற்றும் அதிகப்படியான உணவை எடுத்துக் கொள்வதை தடுக்கிறது.இது ஆரோக்கியமான செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
புரதங்கள், இரும்பு மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் காரணமாக, பருப்பு வகைகளை தவறாமல் சாப்பிடுவது உங்கள் செல்களை சரி செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்ற வேலைகளுக்கு உதவுகிறது.
பருப்பிலுள்ள இரும்புச் சத்து இரத்த சோகை அபாயத்தை குறைக்க உதவுகிறது. நோயெதிர்ப்பு அமைப்பு முதல் செரிமானம் வரை சிறப்பாக நடைபெற உதவுகிறது. நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.
பருப்பை தினந்தோறும் உங்க உணவில் சேர்த்து வருவது கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
இதன் மூலம் உங்க இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இது இருதய நோய் உருவாகும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
நாம் சமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள் !
தேவையான பொருட்கள் :
புளித்தண்ணீர் – ஒன்றரை கப்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
ரசப்பொடி – 2 டீஸ்பூன்,
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு,
பூண்டுப் பல் – 2,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
உப்பு – சிறிதளவு.
உருண்டை செய்ய.:
கடலை பருப்பு, துவரம் பருப்பு – தலா அரை கப்,
சோம்பு – அரை டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்),
கொத்த மல்லித்தழை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2,
உப்பு – சிறிதளவு.
செய்முறை.:
பருப்புகளை அரை மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து அதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
நறுக்கிய வெங்காயம், கொத்த மல்லித்தழையை இதில் போட்டுக் கலந்து, உருண்டைகளாக பிடித்து, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுத்து கொள்ளவும்.
கடாயில் புளித்தண்ணீரை விட்டு, உப்பு, மஞ்சள் தூள், ரசப்பொடி, சாம்பார் பொடி சேர்த்து, பூண்டை நசுக்கிப் போட்டு கொதிக்க விடவும்.
கொதி வந்தவுடன் வெந்த பருப்பு உருண்டை சேர்த்து, மீண்டும் கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.