உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல பகுதிகளில் விளையும் பேரீச்சை பழங்கள் ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக உள்ளன.
நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் இயற்கையான இனிப்புச் சத்து ஆகியவற்றை கொண்டுள்ள பேரீச்சை பழங்கள் நமக்கு துரிதமான ஆற்றலை தருகிறது மற்றும் ஒட்டு மொத்த உடல்நலனுக்கு பல வகைகளில் பலன் அளிப்பதாக உள்ளது.
உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும், கொலஸ்ட்ராலை கரைப்பதற்கும் இது உறுதுணையாக அமைகிறது. பேரீச்சையை பலர் ஸ்நாக்ஸ் போல சாப்பிடுகின்றனர்.
சிலர் காலை உணவில் இதனை சேர்த்துக் கொள்கின்றனர். பிரியாணி உணவுடன் பேரீச்சையை சைட் டிஷ் ஆக சேர்த்துக் கொள்ளும் வழக்கம் பலரிடம் உள்ளது.
இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றாக உள்ள ஆயுர்வேதத்தில் பேரீச்சை பழங்கள் அதன் குளிர்ச்சி தன்மையை கருத்தில் கொண்டு பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இதனை நெய்யில் சேர்த்து சாப்பிடுவதை ஆயுர்வேதம் ஊக்குவிக்கிறது. கபம் வாதம் போன்றவற்றை நெய் குறைக்கும் என்று அறியப்படுகிறது.
நெய் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும் என்றும், எலும்புகள் வலுவடையும் என்றும், இதே நலன் மேம்படும் என்றும் ஆயுர்வேதம் தெரிவிக்கிறது.
நெய்யில் பேரீச்சை பழத்தை சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், நம் உடலில் உள்ள திசுக்கள் புத்துணர்ச்சி அடையும் என்றும் ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.
சுவையான பாதாம் பிஸ்தா அல்வா செய்வது எப்படி?
அது மட்டுமல்லாமல், நம் எண்ண ஓட்டம் மேம்படையும் என்றும், ஆழ்ந்த உறக்கம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தேவையான பொருட்கள்.:
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - 20,
பால் - 2½ கப்,
முந்திரி மற்றும் பாதாம் - 10,
நெய் - 1 தேக்கரண்டி.
செய்முறை.:
பேரீச்சம் பழத்தை கழுவி ½ கப் பாலில் ஊற வைக்கவும்.
அரை மணி நேரத்திற்கு பிறகு பழத்தை ஊற வைத்த, பாலை விட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
இதே நேரத்தில் 2 கப் பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி பாதியாக சுண்டும் அளவிற்கு காய்ச்சிக் கொள்ளவும். அரைத்த பேரிச்சை கலவையை காய்ச்சி பாலில் ஊற்றி லேசாக சிறிது நேரம் கொதிக்க விடவும்.
இதே நேரத்தில் 1 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி, பாதாம் அல்லது தேங்காய் சீவல்களை சிவக்க வறுத்து பாலில் சேர்க்கவும்.
தேவைப்படுபவர்கள் ஏலக்காய் அல்லது குங்குமப்பூவையும் கூட சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பாயசத்திற்கு சர்க்கரையோ வெல்லமோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
சூப்பரான பேரீச்சம்பழ பாயாசம் ரெடி.