அருமையான முட்டை பணியாரம் செய்வது எப்படி? #Paniyaram





அருமையான முட்டை பணியாரம் செய்வது எப்படி? #Paniyaram

1 minute read
பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் சிற்றுண்டி. அதில் வகை வகையான பணியாரங்கள் உண்டு. அதே போல் ஒரு வித்தியாசமான பணியாரம் தான் இந்த முட்டை பணியாரம்.
முட்டை பணியாரம் செய்வது
தேவையானப் பொருட்கள்
* இட்லி மாவு – ஒரு கப்

* முட்டை – 2

* சின்ன வெங்காயம் – 6

* பச்சை மிளகாய் – 2

* கறிவேப்பிலை – 1 கொத்து

* கடுகு – கால் தேக்கரண்டி

* உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி

* உப்பு – தேவையான அளவு

* எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை
வெங்காயத்தை நீளவாக்கிலும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கவும் ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டையை நன்றாக அடித்து கலக்கவும்
பின்னர் கலக்கி வைத்த முட்டையை இட்லி மாவுடன் ஊற்றி தெவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அவற்றை தனியாக எடுத்து வைக்கவும். 

பின்னர் தாளித்த பொருட்களை முட்டை இட்லிமாவு கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
குழிப்பணியாரக் கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால் பாகம் அளவிற்கு ஊற்றவும்.
பணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு வேக விட்டு எடுக்கவும், இப்பொழுது சுவையான முட்டை பணியாரம் தயார்.
Tags:
Random Posts Blogger Widget
Today | 5, April 2025