பச்சை மிளகாயில் இரும்புச்சத்து முதல் இன்னும் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும்.
இருந்தாலும் பச்சை மிளகாய் மற்றும் காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளுகின்ற பொழுது நெஞ்செரிச்சல் போன்றவை உண்டாகும்.
ஆனால் அதேசமயம் பச்சை மிளகாய்க்கு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும கலோரிகளை எரிக்கின்ற ஆற்றலும் உண்டு.
அதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தங்களுடைய உணவில் சில குறிப்பிட்ட முறைப்படி பச்சை மிளகாயைச் சேர்த்துக் கொள்வதால் உடல் எடையைக் குறைக்க முடியும்.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்த உடனேயே பல வழிகளில் நாம் பல விஷயங்களைச் செய்து கொண்டிருப்போம் உடல் எடை குறைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஒரு முடிவுக்கு வந்து விடுவோம்.
எடுத்தவுடன் அப்படி அதிக சிரமம் தரக்கூடிய உடல் எடை குறைக்கும் விஷயங்களைச் செய்வதைவிட எளிதாக ஆரம்பிப்பது நல்லது.
அது மட்டுமில்லாமல் எளிதாகப் பண்ணக்கூடிய ஒரு சில விஷயங்கள் பெரும் பலனைத் தரும்.தோசை மற்றும் இட்லிக்கான ஒரு புதிய வகையான சட்னி.
தேவையான பொருட்கள்
கோஸ் – ஒரு கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
புலி – கால் எலுமிச்சை பழம் அளவு
உப்பு – தேவைகேற்ப
இஞ்சி – ஒரு சிறு துண்டு
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உடைத்த உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிதளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் இரண்டு டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கோஸ் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.
வறுத்த உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கோஸ் அதனுடன் புலி, உப்பு, இஞ்சி ஆகிய வற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.