பாசுமதி என்றாலே அது பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் அரிசி வகை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். வழக்கமாக இருக்கும் அரசி வகையை விட நீளமாக இருக்கும் இந்த பாசுமதி அரிசியை ஆயுர்வேதமும் பரிந்துரை செய்கிறது.
பாசுமதி அரிசி மற்ற அரிசிகளை விட லேசானதாக இருக்கும். ஸ்டார்ச்சின் அளவும் இதில் குறைவு என்பதால் மிக எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது.
அதனால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் பத்தியத்தில் இருக்கும் போதும் கூட பாசுமதி அரிசியை எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகிறது.
இந்த பாசுமதி அரிசியை எடுத்துக் கொள்ளும் போது உடலில் ஜீரண ஆற்றல் மேம்பட்டு. எளிதில் உடல் கழிவுகள் வெளியேற்றப்படும்.
வாத, பித்த, கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் உடலில் அதிகரிக்கச் செய்யாமல் சமநிலையில் வைத்துக் கொள்வதற்கு பாசுமதி அரிசி உதவி செய்கிறது.
அதனால் வாத, பித்த. கபம் இவற்றில் எது அதிகமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் உணவில் பாசுமதி அரிசியைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
கார்போஹைட்ரேட் உணவுகள் ஜீரணமடைந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். அதற்கு கடினமான அரிசி வகைகளை விட மிக லேசான அரிசியான பாசுமதியை எடுத்துக் கொள்வது நல்லது.
பாசுமதி அரிசியை சாப்பிடும் போது மிக எளிதில் ஜீரணமடையும். ஜீரண மண்டலும் குடலும் அதிக சிரமம் இல்லாமல் இலகுவாக ஆரோக்கியமாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 1 பெரிய கப்
குங்குமப்பூ - சிறிது
சர்க்கரை - அரை கப்
பிஸ்தா - 10
பாதாம் - 10
திராட்சை -10
முந்திரி - 10
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
ஜாதிக்காய் தூள் - 1 சிட்டிகை
கேசரி கலர் - சிறிது
பால் - சிறிது
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
பிரியாணி இலை - 1
செர்ரி பழத் துண்டுகள் மற்றும் டூட்டி ஃப்ரூட்டி - சிறிது.
செய்முறை :
பாலில் குங்கும பூவையும், கேசரி கலரையும் கரைக்கவும். அரிசியை உதிராக வடித்து ஆற விடவும். கடாயில் நெய் விட்டுக் காய்ந்ததும், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, பாதாம், பிஸ்தா, திராட்சையை வறுக்கவும்.
ஆற வைத்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, உடையாமல் கிளறி, பாலில் ஊறிய
குங்குமப்பூ கலவை, சர்க்கரை, ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள் சேர்த்து
லேசாகக் கிளறவும்.
வறுத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, திராட்சை தூவி, செர்ரி, டூட்டி ஃப்ரூட்டியால் அலங்கரித்து பின் பரிமாறலாம். சுவையான காஷ்மீரி புலாவ் ரெடி !!!