பழங்காலம் முதலாக நம் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் தேங்காய். இந்த தேங்காயானது சமையலில் மட்டுமின்றி, பல்வேறு வடிவங்களில் பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. அதோடு ஃபோலேட், வைட்டமின் சி, தையமின் போன்றவைகளும் உள்ளன.
இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய தேங்காயை தினமும் ஒருவர் ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளின் அபாயத்தைத் தடுக்கலாம்.
உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு தேங்காய் ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் என்றே கூறலாம். ஏனெனில் தேங்காயை சாப்பிடும் போது, அது பசியைக் கட்டுப்படுத்தி, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைத்து, எடை இழப்புக்கு உதவுகிறது.
இது தவிர, இரது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது. தேங்காயில் ஆன்டி-பாக்டீரயல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன.
எனவே தேங்காயை உட்கொள்ளும் போது, அது உடலை பாக்டிரியாக்கள், பூஞ்சைகளின் தாக்குதலைத் தடுத்து, உடலை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
நீங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை எளிய முறையில் வலிமையாக்க விரும்பினால், தேங்காய் துண்டுகளை தினமும் சாப்பிடுங்கள் போதும். தேங்காயில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன.
இவை உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கின்றன. மேலும் இது உடலில் இரத்த கொலஸ்ட்ரால் அளவையும் மேம்படுத்த உதவுகிறது.
உடலில் நல்ல கொலஸ்ட்ரால் சிறப்பான அளவில் இருந்தால், இதய நோயின் அபாயம் குறையும். சுருக்கமாக கூற வேண்டுமானால், தேங்காய் துண்டு சாப்பிட்டால் இதய நோய் வரும் அபாயம் குறையும்.
தேவையான பொருட்கள்:
அதிமதுரம் - 5 துண்டுகள்
தேங்காய்ப் பால் - 1 டம்ளர்
சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
தூளாக்கிய வெல்லம் - தேவைக்கு
ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்
செய்முறை:
அதிமதுர துண்டுகளை தூளாக்கி நீரில் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அதை அரைத்து பிழிந்து ஒரு டம்ளர் அளவுக்கு சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் அந்த சாறை ஊற்றி கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்து வந்ததும் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும்.
மீண்டும் கொதிக்கும் போது சுக்கு பொடி, வெல்லம் ஏலக்காய் தூள் ஆகியவற்றை கொட்டி சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
இதனை ஆறவைத்து பருகலாம்.