மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு செய்வது எப்படி?





மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு செய்வது எப்படி?

தென்னிந்திய உணவுகள் மட்டும் தான் காரசாரமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். வட இந்தியாவின் சில பகுதிகளிலும் அசைவ உணவுகள் நன்கு காரமாக இருக்கும். 
மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு
அதிலும் வட இந்தியாவில் மசாலா பொருட்களைத் தான் அதிகம் பயன்படுத்துவார்கள். 
இங்கு வட இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வெங்காயம் – 1 (நறுக்கியது)

தேங்காய் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

காஷ்மீரி வர மிளகாய் – 5

ஜாதிக்காய் – 1

கசகசா – 1/2 டீஸ்பூன்

மல்லி – 1/2 டீஸ்பூன்

சோம்பு – 1/4 டீஸ்பூன்

சீரகம் – 1/4 டீஸ்பூன்
பட்டை – 2

ஏலக்காய் – 3

கிராம்பு – 3

தக்காளி – 3 (நறுக்கியது)

பசலைக்கீரை – 1/4 கப்

வேக வைத்த முட்டை – 4

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, மல்லி, ஜாதிக்காய், காஷ்மீரி வர மிளகாய், பட்டை, ஏலக்காய், கிரம்பு, சீரகம் சேர்த்து வறுத்து இறக்கி, 

குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய் பொடியையும் சேர்த்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து மிதமான தீயில் தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் பசலைக்கீரை சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டிப் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்த மல்லியைத் தூவினால், மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு ரெடி!!!
Tags: