நம் முன்னோர்கள் உடல்நலனைக் காப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர். அவர்கள் பல வகையான, இயற்கையில் கிடைக்கும் தாவர வகைகளை மருந்தாகப் பயன்படுத்தி வந்தனர்.
அவ்வாறு பயன்படுத்தப்பட்ட தாவரங்களில் முருங்கையும் ஒன்றாகும். முருங்கைக் கீரையில் வியக்கத்தக்க மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. பல நோய்களைக் குணப்படுத்தவும், வருமுன் காக்கவும் முருங்கைக் கீரை உதவுகிறது.
வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்த்து வந்தால், வீட்டில் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம். முருங்கைக் கீரை 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும்.
67 வகையான நோய்களைக் குணப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடுகிறது. முருங்கைக் கீரையில் 90 வகையான சத்துகளும், 46 வகையான மருத்துவ குணமும் இருப்பதாக ஆய்வுக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
முருங்கக் கீரையை சுத்தப்படுத்த அதிக நேரம் தேவைப்படுவதாலும், அதன் மணம் சிறிது கசப்புத் தன்மையோடு இருப்பதாலும், மக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்துவ தில்லை.
பச்சைக்கீரை தேவையான போது கிடைப்பது அரிது. ஆனால், உலர்ந்த கீரையைச் சேமித்து வைத்தல் எளிது. பல நாள்கள் கெடாமல் இருக்கும்.
ஹரியாலி சமோசா செய்வது எப்படி?
தேவையானவை : .
துவரம் பருப்பு - அரை கப்,
கடலை பருப்பு அரை கப்,
உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்,
பச்சரிசி - கால் கப்,
புழுங்கலரிசி -
கால் கப்,
துளிரான முருங்கைக்கீரை - ஒரு கப்,
தேங்காய் துருவல் - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 6,
உப்பு - தேவைக்கேற்ப,
பெருங்காயத்தூள் - அரை
டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை : .
பருப்பு வகை, அரிசி,
காய்ந்த மிளகாய் எல்லா வற்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். முருங்கைக் கீரையை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி வைத்துக்
கொள்ளவும்.
ஊற வைத்த பருப்பு, அரிசி, மிளகாய் இவற்றுடன் பெருங்காயம், உப்பு,
தேங்காய் துருவல் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த
மாவுடன் வதக்கி வைத்த முருங்கை கீரையை சேர்த்து, ஒன்றாகக் கலந்து அடைகளாக
சுட்டெடுக்கவும்.
கேக் செய்ய பேக்கிங் ஓவன் தேவையில்லை குக்கரில் செய்வது எப்படி?
குறிப்பு:
அடைகளை சுடும் பொழுது அதன் நடுவில் சிறு
ஓட்டை போட்டு அதிலும் சற்று எண்ணெய் விடவும். சுற்றிலும் சிறிது எண்ணெய்
விடவும்.
இவ்வாறு செய்வதால் அடையின் உட்புறத்திலும் நன்றாக வேகும். பின்னர்
திருப்பிப் போட்டு சிவந்தவுடன் எடுக்கவும். முருங்கை கீரையை வதக்கிப்
போடுவதால் வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது.