கம்மஞ்சோறு, கம்மங்கூழ், கம்பு ரொட்டி, கம்பு தோசை, கம்பு இட்லி, கம்பு புட்டு, கம்பு கொழுகட்டை, கம்மங்களி, கம்பு பணியாரம் என்று எல்லா உணவுகளையும் ருசிபட தயாரிக்கலாம்.
இதனால் உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். கம்பில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் தலைமுடி உதிர்வு உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தலை முடி உதிர்வில் இருந்து விடுபடலாம். கம்பு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை குறைக்கிறது.
கம்மங்கூழை ஒருவர் அன்றாடம் தவறாமல் குடித்து வந்தால், அதில் உள்ள கால்சியம் எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரித்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
முக்கியமாக ஆர்த்ரிடிஸ் மற்றும் எலும்பு முறிவு உள்ளவர்கள் கம்மங்கூழைக் குடிப்பது மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள் :
கம்பு மாவு - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
ப.மிளகாய் - 2
சிவப்பு மற்றும் பச்சை நிற குடைமிளகாய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், சிவப்பு மற்றும் பச்சை நிற குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கம்பு மாவுடன் நீர் கலந்து, தோசை மாவு பக்குவத்தில் நன்றாக கலந்து கொள்ளவும்.
சத்து நிறைந்த கம்பு ஊத்தப்பம்
ருசிக்கு தகுந்த உப்பு சேர்க்கவும். ஒரு கிண்ணத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், சிறிதளவு உப்புடன் கலந்து வைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவிய பின், கம்பு மாவு கலவையை தடித்த தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றவும். தோசை மீது தாராளமாக வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், குடை மிளகாய் கலவையை தூவி வேக வைக்கவும்.
ஒரு பக்கம் வெந்ததும் தோசையை திருப்பி போட்டு வேக வைக்கவும்.
சூப்பரான கம்பு ஊத்தப்பம் ரெடி.
சூடாக சாம்பாருடன் பரிமாறலாம்