அருமையான வெங்காயம் சிக்கன் ப்ரை செய்வது எப்படி?





அருமையான வெங்காயம் சிக்கன் ப்ரை செய்வது எப்படி?

குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு எளிதில் சுவாசிக்க உதவுகிறது. வெங்காயத்தில் வைட்டமின் E அதிகம் உள்ளதால், கண் சம்பந்தப்பட்ட பிரச்சினையை தடுக்கிறது. 
அருமையான வெங்காயம் சிக்கன் ப்ரை செய்வது எப்படி?
வெங்காயத்தில் உள்ள இரும்பு சத்து உடலில் எளிதாக கலக்கும் தன்மை கொண்டது. ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை சாப்பிட்டால் ரத்த சோகை பிரச்னைகள் குணமாகும். 

வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வரக் காரணம் அவற்றில் காணப்படும் சல்பெனிக் அமிலம். திரவ வடிவில் இருக்கும் சல்பெனிக் அமிலமானது வெங்காயம் வெட்டும் போது காற்றுடம் கலந்து ஆவியாக மாறுகிறது. 

எரிச்சல் ஏற்படுத்தக் கூடிய இந்த அமிலம் காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து நம்மை அழ வைத்து விடுகிறது. வெங்காயத்தை நறுக்கும்போது கண்ணீர் வராமல் இருக்க அதன் தோலை உரித்த பின் நன்கு கழுவ வேண்டும். 

அதன்பின் அறிந்தால் கண்ணீர் வராது. சரி. எவ்வளவோ காய்கறிகள் உள்ளபோது வெங்காயத்தை அரிந்தால் மட்டும் கண்ணீர் வருவது ஏன்? 

இதற்குக் காரணம் வெங்காயத்தில் புரொப்பேன் தயால் எஸ் ஆக்ஸைடு எனும் ஒரு வேதிப் பொருள் இருப்பதால் தான். இந்த வேதிப்பொருள் வெங்காயம் அரியும் போது கண்களைத் தாக்கி அதனால் கண்ணீர் வரவழைக்கிறது.

என்னென்ன தேவை?
சிக்கன் – 1/2 கிலோ

ஊற வைக்க…

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மல்லி தூள் – 2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

உப்பு – சிறுது

மசாலாவிற்கு…

எண்ணெய் – 3 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

வெங்காயம் – 4

பச்சை மிளகாய் – 3 கத்தியால் குத்தப்பட்டு

இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை – 1/2 கப்

எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
எப்படிச் செய்வது?
வெங்காயம் சிக்கன் ப்ரை செய்வது
ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த சிக்கனை எடுத்து உப்பு மற்றும் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து நன்கு கலந்து அதை ஊற வைக்கவும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது சீரகம், வெட்டி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன் நிறமாக வதக்கவும். 
இப்போது ஊறவைக்கப்பட்ட சிக்கனை சேர்த்து வதக்கி ஒரு மூடி கொண்டு மூடி மிக குறைந்த வெப்பத்தில் சிக்கன் வேகும் வரை சமைக்கவும். 

வெந்த பின்னர் அதில் உள்ள தண்ணீர் வறண்டுபோகும் வரை வதக்கி கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.
Tags: