டேஸ்டியான வெங்காய இறால் செய்வது எப்படி?





டேஸ்டியான வெங்காய இறால் செய்வது எப்படி?

இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.. கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.
வெங்காய இறால்
கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். 

இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும். 

இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. 

இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. 

பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும். சரி இனி இறால் பயன்படுத்தி டேஸ்டியான வெங்காய இறால் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை :
இறால் – கால் கிலோ

வெங்காயம் – கால் கிலோ

தக்காளி – இரண்டு

இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு தேக்கரண்டி

பட்டை – ஒன்று

எண்ணெய் – சாதாரண எண்ணெய் (அ) 

ஆலிவ் – ஐந்து தேக்கரண்டி

மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

கொத்த மல்லித்தழை – சிறிது

பச்சை மிளகாய் – இரண்டு

செய்முறை :

இறாலை முதுகிலும், வயிற்றிலும் உள்ள அழுக்கெடுத்து சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

பெரிய வாயகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டையை போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு தீயை சிம்மில் வைத்து கருகாமல் நன்கு வேக விடவும்.

வெங்காயம் நன்கு சிவக்காமல் வதங்க வேண்டும். வெந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சைவாடை போகிறவரை கிளறி கொத்த மல்லித்தழை, பச்சை மிளகாயை சேர்க்கவும்.

பிறகு இறாலை சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தக்காளியையும் சேர்த்து கிளறி சிம்மில் விடவும். 
அப்படியே கூட்டு மாதிரி வரும். இதற்கு எண்ணெய் அதிகமாக ஊற்றினால் தான் நல்லா இருக்கும்.
Tags: