பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் காணப்படுகிறது. இதனால் மனநலம் பாதிக்கப் பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள்.
பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து அதிகம் நிறைந்துள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் மாற்றும் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.
உடல் ஒல்லியாய் இருப்பவர்கள், நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வளரும் குழந்தைகள், மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும்.
பச்சை பட்டாணியில் இந்த மக்னீசியம் அதிகமுள்ளது. பட்டாணி தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கங்கள் ஏற்படுவது தள்ளிப்போகிறது.
இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படாம லிருக்கவும் பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருள்கள்:
பச்சை பட்டாணி = 200 கிராம்
பச்சை மிளகாய் = 6
தக்காளி = கால் கிலோ
பூண்டு = 1 முழுதாக
வெங்காயம் = 2
தேங்காய் = 1 மூடி
இஞ்சி = அரையங்குலம்
முந்திரி பருப்பு = 10
பொட்டு கடலை = 4 ஸ்பூன்
கசகசா = 2 ஸ்பூன்
சோம்பு = 1 ஸ்பூன்
ஏலக்காய் = 3
பட்டை = 2
கிராம்பு = 3
பிரிஞ்சி இலை = 1
ஜாதிக்காய் பொடி = கால் ஸ்பூன்
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
பச்சை பட்டாணியை உரித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு நீளவாட்டில் அரிந்து கொள்ளவும்.
தேங்காய், இஞ்சி, முந்திரி பருப்பு, பொட்டு கடலை, கசகசா, சோம்பு, ஏலக்காய்
ஆகிய வற்றை அரைத்துக் கொள்ளவும். பட்டை, கிராம்பை சிறிது தட்டிக்
கொள்ளவும்.
எண்ணெயில் தட்டிய பட்டை,கிராம்பு, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரிந்து வைத்துள்ள வற்றைச் சேர்த்து வதக்கவும்.
இதனோடு பச்சை பட்டாணியையும் சேர்த்து தேவையான அளவு கொதித்ததும் உப்பும்,
தேவையானால் சிறிது எலுமிச்சை சாறும், ஜாதிக்காய் பொடியையும், கொத்த மல்லியையும் சேர்த்து பரிமாறவும்.
சுவையான பட்டாணி குருமா தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பிரட், நூடுல்ஸ், ஆப்பம், அடை, கட்லேட், சமோசா ஆகிய வற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
பச்சை பட்டாணியில் ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள், ஸ்டார்ச், புரதம்,
வைட்டமின்கள் A மற்றும் C அதிகம் காணப்படுகிறது.
பச்சை பட்டாணி 100 கிராம்
மட்டும் 81 கலோரி வழங்குகிறது. மேலும் இதில் கொழுப்பு சத்து இல்லை. எனவே இந்த பட்டாணி குருமா உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.