சுவையான மிளகு - மல்லி ரசம் செய்வது எப்படி?

சுவையான மிளகு - மல்லி ரசம் செய்வது எப்படி?

மல்லி விதைகள் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்டது. அதனால், இன்சுலின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. அலர்ஜி, கண் தொற்று போன்றவற்றை குணப்படுத்துகிறது. 
சுவையான மிளகு - மல்லி ரசம் செய்வது எப்படி?
ரத்த சோகை நோயையும் தீர்த்து, ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. இதனால் இதயத்துக்கு மிகவும் பாதுகாப்பான உணவாக இந்த மல்லி விதை உதவுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த விதையை பயன்படுத்தலாம். 

காரணம், கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் திறன் இந்த விதைக்கு உண்டு. தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுவதால், உடல் எடை இழப்பில் பேருதவி புரிகிறது இந்த விதை. 

தேவையான பொருட்கள்.:

மிளகு – 2 டீஸ்பூன்,

மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன்,

ரெடிமேட் ரசப்பொடி – ஒரு டீஸ்பூன்,

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,

தக்காளி – ஒன்று,

புளி – சிறிதளவு,

வெல்லம் அல்லது சர்க்கரை – சிறிதளவு,
நெய் – ஒரு டீஸ்பூன்,

பூண்டுப் பல் – 2,

கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை – சிறிதளவு,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை.:
மிளகு – மல்லி ரசம் செய்வது
நெய்யில் மிளகு, தனியாவை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். புளியில் 2 கப் நீர் விட்டு புளிக்கரைசல் தயார் செய்யவும்.

கடாயில் புளிக்கரைசலை விட்டு உப்பு, பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டுப் பல், நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.

இப்போது மிளகு-தனியா பொடி, ரசப்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கி, வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கவும்.
எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். கொத்த மல்லித்தழை தூவி, ரசப் பாத்திரத்தை மூடவும்.

குறிப்பு.:

ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கிய உடனேயே மூடி விட்டால்… ரசத்தின் மணம், சுவை அப்படியே கிடைக்கும்.
Tags: