பொதுவாக மீன்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு பொருளாகும். சில உணவு பொருட்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் அதனை அதிகமாக சேர்த்து கொள்ளும் பொழுது நஞ்சாக மாறுகிறது.
மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.
பொதுவாகவே சிறிய வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் இவை கடல்பாசியை அதிகமாக உண்டு வாழ்வதால் ஒமேகா 3 அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில் சால்மன் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைவாக இருக்கிறது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரியவந்துள்ளது.
சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது.
வாரத்திற்கு ஒரு முறையாவது உணவுடன் மீனை சேர்த்து கொள்வது நல்லது. சரி இனி மீன் பயன்படுத்தி டேஸ்டியான தக்காளி மீன் வறுவல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையான பொருட்கள் :
தக்காளி – 4
மீன் – 1/4 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பொடித்த சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தனியா தூள் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
தக்காளியை மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடித்த சோம்பு, மிளகுத்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
பிறகு மீன் துண்டுகளின் மீது மசாலா தடவி, சிறிது நேரம் ஊறிய பிறகு எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள். அவ்வளவு தான் சுவையான தக்காளி மீன் வறுவல் தயார்.