சூப்பரான பாலக்கீரையில் சாம்பார் செய்வது எப்படி?





சூப்பரான பாலக்கீரையில் சாம்பார் செய்வது எப்படி?

பாலக்கீரையில் வைட்டமின் A அதிக அளவில் உள்ளதால் மாலைக்கண் மற்றும் கண்களில் அரிப்பு ஏற்படுதல் போன்றவற்றை வராமல் தடுக்க உதவுகிறது.
சூப்பரான பாலக்கீரையில் சாம்பார் செய்வது எப்படி?
பாலக்கீரையில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன. பாலக்கீரையில் போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது. 
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் இதனை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்க உதவுகிறது. பாலக்கீரையில் மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது. 

இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது, ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது. பாலக் கீரையானது புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது.
 
பாலக்கீரை இலைச் சாற்றுடன், சீரகம் 5 கிராம், பூண்டு இரண்டு பல் ஆகியவற்றை அரைத்து மூன்று சம பாகமாகப் பிரித்து வடிகட்டி மூன்று வேளை சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.
தேவையான பொருட்கள் :

பாலக் கீரை - 1 கட்டு

வேக வைத்த துவரம் பருப்பு - 1 கப்

சின்ன வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி - 1

சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

புளி - 1 எலுமிச்சை அளவு

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்

கொத்து மல்லித்தழை - சிறிது
செய்முறை. :
பாலக்கீரையில் சாம்பார்
கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். தக்காளி, வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சிறிது ஊற்றி கீரையை வேக வைத்து கொள்ளவும்.

நன்றாக கீரை வெந்ததும் அதை மத்தால் மசித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
பிறகு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். புளியை கரைத்து வடிகட்டி ஊற்றவும். 
வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் குறைந்த தீயில் மூடி வைத்து விடவும். 

இறுதியில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
Tags: