அருமையான புளிப்பு கார போண்டா செய்வது எப்படி?





அருமையான புளிப்பு கார போண்டா செய்வது எப்படி?

பார்த்த முதல் நொடியே நம்மைக் கவர்ந்திழுக்கும். முழுக்க முழுக்க புரதக்கூறுகளை தேக்கி வைத்திருக்கும் அற்புதப் படைப்பு, கடலைப் பருப்பு. 
புளிப்பு கார போண்டா
உடலுக்குத் தேவைப்படும் அமினோ அமிலங்களை தாராளமாகப் பெற கடலைப்பருப்பு போன்ற அடிப்படை உணவுப் பொருள்கள் அதிகம்கொண்ட நமது உணவு முறை சிறப்பானது.
4500 ஆண்டுகளுக்கு முந்தைய கடலைப் பருப்பின் படிமங்கள், ராஜஸ்தானின் கலிபங்கன் பகுதியில் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்திருக்கின்றன. மேற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகள் தாம் இதன் தாயகம் என்று சொல்லப்படுகிறது. 

தென்னிந்தியாவில் கி.மு 500-வது ஆண்டு வாக்கில்தான் கடலைப்பருப்பு நுழைந்தது என்று கூறப்படுகிறது. மார்க்கண்டேய புராணம் மற்றும் விஷ்ணு புராணத்தில் கடலைப்பருப்பு பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. 

தென்னிந்தியாவின் மணம்மிக்க எண்ணெய் வகைகளில் வறுக்கப் படும் கடலைப்பருப்பு. என இதைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு காணப்படுகிறது. 

இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சமையலில், நீண்ட நாள்களாகவே கடலைப்பருப்புக்கு முதன்மை இடம் உண்டு. கடலைப்பருப்பின் ஆதாரத்துக்கு சூரம் என்றொரு பெயரும் உண்டு. 

சூரமேனிக்குரத தொக்கவுண்டாகும். எனும் வரியால் கடலை உடலுக்கு உறுதியைக் கொடுக்கும் என்கிறது தேரன் காப்பியம் நூல். இக்காரணத்துக்காக இளைத்த உடல் உள்ளவர்கள் கடலைப்பருப்பு சார்ந்த உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். 

பச்சைக் கடலையை உணவு வகைகளில் சேர்த்து வந்தால், நுரையீரலுக்கு வன்மை கிடைப்பதுடன் எடையும் அதிகரிக்கும். சாலையோர கையேந்தி பவன்களில் கிடைக்கும் வடையையும், போண்டாவையும் பிரியப்பட்டு சுவைப்போர் எண்ணிலடங்கா... 

இவைகளை நீங்களே வீட்டிலேயே சுவையாக தயாரித்து உண்ணலாம். உங்களுக்காக புளிப்பும் காரமும் சேர்ந்த போண்டா ரெசிபி இங்கே...
தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - ½ கப்

துவரம் பருப்பு - ½ கப்

உளுத்தம் பருப்பு - ¼ கப்

பச்சரிசி - ¼ கப்

காய்ந்த மிளகாய் - 4

புளி - சிறிதளவு

பெருங்காயம் - ½ டீஸ்பூன்

தேங்காய் துருவல் - ¼ கப்

உப்பு - ருசிக்கேற்ப

எண்ணெய் - பொறித்தெடுக்க

செய்முறை:
பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக ஊறப்போடுங்கள். அதனுடன் மிளகாயையும் சேர்த்து ஊற விடுங்கள். 

ஒரு மணி நேரம் ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து கடுகை பொரித்து கொட்டி கலந்து கொள்ளுங்கள். 
எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொரித்து எடுங்கள். புளிப்பும் காரமும் சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த போண்டா
Tags: